பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையமும் ஆளும் பாஜக-வும் சேர்ந்து கர்நாடகாவுல வாக்குகளை திருடியிருக்காங்கன்னு ஆகஸ்ட் 7, 2025-ல பரபரப்பு குற்றச்சாட்டு வைச்சு, உலகத்தையே திரும்பி பார்க்க வச்சிருக்கார். கர்நாடகாவோட பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதிக்குட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்ற தொகுதியில 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதா அவர் ஆதாரங்களோட சொல்லியிருக்கார்.
இது இந்திய ஜனநாயகத்துக்கு எதிரான “பெரிய கிரிமினல் மோசடி”ன்னு ராகுல் குற்றம்சாட்டியிருக்கார். இந்த பரபரப்பு குற்றச்சாட்டு, தேர்தல் ஆணையத்தையும் பாஜக-வையும் கடுமையா குறி வச்சிருக்கு. இந்த நிலையில, ராகுலோட சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி எம்.பி., ஆகஸ்ட் 8-ல பாராளுமன்ற வளாகத்துல நிருபர்களை சந்திச்சு, ராகுலுக்கு முழு ஆதரவு கொடுத்து, இந்த விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கார்.
பிரியங்கா, “ராகுல் ஒன்னும் தப்பா சொல்லல. 1 லட்சம் வாக்குகள் திருடப்பட்டிருக்குன்னு ஆதாரங்களோட வெளிப்படுத்தியிருக்கார். இது தற்செயலான தவறு இல்லை, வேண்டுமென்றே நடந்த மோசடி. இதை விசாரிக்கணும், ஆனா தேர்தல் ஆணையம் விசாரிக்காம, பிரமாண பத்திரம் கேக்குது. 30 நாள் கெடு வச்சு ஆதாரம் கேக்குறாங்க, ஆனா எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க.
இதையும் படிங்க: அஸ்திவாரத்தை அசைச்சு பார்த்துடீங்க.. இனி உங்களை தொட விடமாட்டோம்.. ராகுல் காந்தி ஆவேசம்..!!
ஏன் வாக்காளர் பட்டியலை எங்களுக்கு தர மறுக்குறாங்க? ஏன் விசாரணை நடத்த மாட்டேங்குறாங்க? ஒரு லட்சம் வாக்காளர்களை நீக்கினா, தேர்தல் முடிவையே மாத்திட முடியும். இது ஜனநாயகத்துக்கு எதிரான குற்றம். ஒரு நாள் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தா, இந்த மோசடிக்கு துணை நின்னவங்க பதில் சொல்லியே ஆகணும்”னு காட்டமா பேசியிருக்கார்.

ராகுல், ஆகஸ்ட் 7-ல டில்லியில AICC தலைமையகத்துல செய்தியாளர் சந்திப்புல, மகாதேவ்புரா தொகுதியில 6.5 லட்சம் வாக்காளர்கள்ல 1,00,250 வாக்குகள் 5 வழிகள்ல திருடப்பட்டதா ஆதாரங்களோட விளக்கியிருக்கார்: 11,965 டூப்ளிகேட் வாக்காளர்கள், 40,009 போலி முகவரிகள், 10,452 ஒரே முகவரியில மொத்த வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்கள், 33,692 படிவம் 6 தவறான பயன்பாடு.
உதாரணமா, ஒரு மனிதர் 4 வாக்குச்சாவடிகள்ல வாக்காளரா பதிவாகியிருக்கார், ஒரு 10-15 சதுர அடி வீட்டுல 80 வாக்காளர்கள் இருக்காங்கன்னு பதிவு செஞ்சிருக்காங்க, ஆனா அங்க யாருமே இல்லைன்னு ராகுல் குற்றம்சாட்டியிருக்கார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், “ராகுலோட குற்றச்சாட்டு 100% உண்மை. பாஜக இந்த மோசடி மூலமா 25 இடங்களை திருடி ஆட்சியை பிடிச்சிருக்கு. மோடி உடனே ராஜினாமா செய்யணும்”னு கோரிக்கை வைச்சிருக்கார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “இந்த வாக்கு திருட்டு நாடு முழுக்க நடந்திருக்கு. ஜனநாயகத்தை காப்பாத்த இதை எதிர்க்கணும்”னு சொல்லியிருக்கார்.
ஆனா, தேர்தல் ஆணையம், “ராகுல் ஆதாரங்களை பிரமாண பத்திரமா கொடுங்க”னு சொல்லி, இந்த குற்றச்சாட்டுகளை “பொறுப்பற்றவை”ன்னு நிராகரிச்சிருக்கு. பாஜக எம்.பி. பி.சி. மோகன், “இது காங்கிரஸோட தோல்வி ஏற்க முடியாத விரக்தி”ன்னு பதிலடி கொடுத்திருக்கார்.
இந்த விவகாரம், இந்தியாவோட ஜனநாயக அமைப்பு மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குது. காங்கிரஸ், ஆகஸ்ட் 8-ல பெங்களூரு ஃப்ரீடம் பார்க்குல “வாக்கு அதிகார் ராலி” நடத்தி, தேர்தல் ஆணையத்துக்கு மனு கொடுக்க திட்டமிட்டிருக்கு.
இதையும் படிங்க: ஒரு வலிமையான ஆதாரத்தை முன்வைத்தார் ராகுல்.. சப்போர்ட்டுக்கு இறங்கிய ப.சிதம்பரம்..!!