ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 18- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.59 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணில் ஏவுகிறது. இந்த ராக்கெட்டில் 1,710 கிலோ எடை கொண்ட இ.ஓ.எஸ்-09 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ந்து வரும் பூமி கண்காணிப்பு பணியில் இந்த செயற்கைக்கோளும் ஈடுபடுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், ராக்கெட் ஏவும் நேரத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க மீன் வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மே 18 ஆம் தேதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பலூசிஸ்தானில் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அதிகரிக்கும் ஆதரவு.. சோஷியல் மீடியாவில் பலூச் படையினர் வெறித்தனம்!

இதையும் படிங்க: ஜஸ்ட் மிஸ்ஸு.. இந்தியாவின் அடியில் கதி கலங்கிய பாக்., நூலிழையில் தப்பிய VVIP விமானம்..!