இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் 2026-ஆம் புத்தாண்டின் தனது முதல் விண்வெளிப் பயணத்தை இன்று வெற்றிகரமாகத் தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-62 (PSLV-C62) ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதனிடையே, PSLV - C 62 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ள அதிநவீன இ.ஓ.எஸ். என்-1 (EOS N-1) செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் இந்த ராக்கெட்டிற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்குத் தொடங்கியது. இந்தியப் பாதுகாப்புத் துறைக்கு வலுசேர்க்கும் வகையிலும், சர்வதேச நாடுகளின் வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இந்த ஏவுதல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து இன்று காலை 10.17 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் சீறிப்பாய்ந்தது. இந்த ராக்கெட்டின் முதன்மை அங்கமாக டி.ஆர்.டி.ஓ உருவாக்கியுள்ள இ.ஓ.எஸ். என்-1 செயற்கைக்கோள் இருந்தது. இதனுடன் ஸ்பெயின் நாட்டின் 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' என்ற சிறிய சோதனை கருவியும் விண்ணுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு இந்தச் செயற்கைக்கோள்கள் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள கருவிகளுடன், 17 வணிக செயற்கைக்கோள்களும் PSLV - C 62 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது PSLV - C62 ராக்கெட்...!
இதனிடையே, இ.ஓ.எஸ்- என் 1 உள்ளிட்ட 16 செயற்கைக்கோள்களுடன் சென்ற நிலையில் மிஷன் தோல்வி அடைந்து விட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்துள்ளார். நிலை நிறுத்தும் பாதையில் இருந்து ராக்கெட் விலகியதால் தோல்வி என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தோல்விக்கான முதன்மை காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இஸ்ரோவின் 2026 முதல் விண்வெளி சாதனை.. ஜன.12ல் விண்ணில் பாய்கிறது PSLV-C62 ராக்கெட்..!!