சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், அவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இணைந்து நடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்றிரவு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோ, இயக்குநர் நெல்சன் இயக்கும் ரஜினி-கமல் படத்தின் புரோமோ பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.
“மக்களுக்காக ஒன்றிணைதல்... வருங்காலத்திற்காக ஒன்றிணைதல்... பிளாஸ்டு பிளாஸ்டு” எனும் வரிகளுடன் வெளியான இந்த வீடியோ, நெற்றியில் திலகம், உடைகள் மற்றும் பின்னணி இசை உள்ளிட்ட அம்சங்களில் ரஜினி-கமல் படத்தை நினைவூட்டுகிறது. இதே பாணியில் அசாம் காங்கிரஸும் முன்பு ராகுல் காந்தி-கௌரவ் கோகோய் வீடியோவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மத்திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றும்!! முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி சூசகம்!!

இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி சிறப்பு பங்கேற்பாளராகக் கலந்துகொண்டார். விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், ராகுல் காந்தியை “நண்பர் ராகுல் காந்தி” எனக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். இந்த நட்புறவு மற்றும் கூட்டணி ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
Some collabs change the game 🔥
Rahul Gandhi 🤝 Vijay@girishgoaINC @nivedithalva @SurajMNHegde pic.twitter.com/OJc8pBw2WV
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) May 9, 2026
வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் இதைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் “அரசியலும் சினிமாவும் இணைந்த அழகான படைப்பு” எனப் பாராட்ட, வேறு சிலர் “கூட்டணி ஒற்றுமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது” எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் முழு ஆதரவு அளித்துள்ள நிலையில், இந்த வீடியோ அரசியல் கூட்டணியின் நல்லிணக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதாக அமைந்துள்ளது. தமிழக அரசியலில் சினிமா பாணி விளம்பரங்கள் புதிதல்ல என்றாலும், ரஜினி-கமல் ஸ்டைலில் ராகுல்-விஜய் இணைப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயல்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த வைரல் வீடியோ தமிழக அரசியலில் புதிய விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: கோட்டையில் முதலமைச்சராக கால் பதித்த விஜய்!! தலைமை செயலகத்தில் இனி ஜனநாயகனின் சர்க்கார்!!