இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் பிரம்மோஸ் ஏவுகணை தயாரிக்கும் தொழிற்சாலையை மத்திய அரசு இன்று திறக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த தொழிற்சாலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறக்க உள்ளார். இந்த தொழிற்சாலையில் இருந்து ஆண்டுக்கு 100 பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய ராணுவத்தால் தயாரிக்க முடியும் என்பது மிகப்பெரிய வலிமை சேர்க்கும்.

2018ம்ஆண்டு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியால் பாதுகாப்பு தொழிற்சாலை குறித்த திட்டம் அறிவிக்கப்பட்டு 2021ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 4 ஆண்டுகள் கட்டுமானப்பணி நிறைவடைந்து இந்தத் தொழிற்சாலை இன்று திறக்கப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி! அடுத்த நகர்வு என்ன? பிரதமர் மோடி அதிமுக்கிய ஆலோசனை!
இந்திய ராணுவத்தின், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), மற்றும் ரஷ்யாவின் என்பிஓ மஷினோஸ்டிரேயனியா ஆகியவை இணைந்து இந்த தொழிற்சாலையை அமைத்துள்ளன. இந்த தொழிற்சாலையில் இருந்து இந்திய ராணுவத்தின் முக்கிய சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை தயாரிக்கப்படுகிறது.

பாதுகாப்பு தளவாடங்கள் தொடர்பான உற்பத்தியில் உத்தரப்பிரதேசம் முக்கிய மாநிலமாக வளர்ந்து வருகிறது. ரூ.300 கோடியில் அமைக்கப்பட்ட இந்த தொழிற்சாலை ராணுவத்தின் வலிமைக்கு கூடுதல் வலு சேர்க்கும்.
உ.பி. மாநிலஅரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் “ 1600 ஹெக்டேர் பரப்பளவு ஏற்கெனவே இந்தத் தொழிற்சாலைக்கு ஒதுக்ககப்பட்டுள்ளது. ஏராளமான நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. பிஎச்இஎல் நிறுவனமும் தொழிற்சாலை அமைக்க பேசி வருகிறது. பிரம்மோஸ் தொழிற்சாலை அமைக்க மட்டும் 80 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் திட்டத்துக்காக பொருட்களைத் தயாரிக்கும் ஏரோலாய் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர லக்னோ, கான்பூர், அலிகார்க், ஆக்ரா, ஜான்ஸி மற்றும் சித்ரகோட் நகரங்களிலும் தொழிற்சாலை அமைய இருக்கிறது. அலிகார்க், லக்னெள, கான்பூரில் ஏற்கெனவே நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜான்ஸி நகரில் 1000 ஹெக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போர் பதற்றம்! எல்லையில் கூடுதல் படை... முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!