தமிழ்நாட்டில் மீண்டும் திமுக அதிமுக இடையில்தான் போட்டி என்பதை வெளியாகி உள்ள பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திட்டவட்டமாக கூறுகின்றன. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தலில் போட்டி திமுக மற்றும் தங்களுக்கு இடையில் தான் என தொடர்ந்து அவர் கூறி வந்த நிலையில், தற்பொழுது கருத்து கணிப்பு முடிவுகள் தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி இடையில் தான் போட்டி என்பதாக சொல்கின்றது.
அனைத்து கருத்துக்கணிப்பு நிலவரங்களும் தவெக விஜய்க்கு எதிராக அமைந்த நிலையில் NDTV நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் விஜய்க்கு சாதகமாக வந்துள்ளது. அதன்படி, விஜயின் தவெக 98 முதல் 120 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக 92-110 இடங்களில் வெற்றி பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல் ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 முதல் கைப்பற்றும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவை விமான நிலையத்தில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் கூறியதாவது: தந்தி ஆன்லைன் 2.50 லட்சம் பேரிடம், ஆன்லைன் போலிங் செய்துள்ளனர். அதில் 120 மேல் வருவோம் என கூறினார். ஆனால் மற்றொரு நிறுவனம் மாற்றி கூறுகின்றனர். இதுவரையிலும் ஒவ்வொரு தேர்தல் குறிப்பாக இலங்கை, நேபால், பஞ்சாப் கருத்து கணிப்பு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கணிப்பா? கானல் நீரா?... Axis My India கருத்துக்கணிப்பில் இதை கவனிச்சீங்களா?... குஷியில் தவெக...!
இதுவரை தமிழகம் மட்டுமல்ல இந்திய வரலாற்றில் பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, இன புரட்சி, தளபதியின் விசில் புரட்சி தான் உலகளவில் தெரிய போகிறது. 200 இடங்களில் வெற்றி பெறுவார், அவர் தமிழ்நாட்டை ஆளுவார். பெரிய சேனல் யாரும் சர்வே எடுக்கவில்லை. டைம்ஸ் நைவ் சேனல் நமக்கு பிடிக்காதே எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அரசியல் ஹீட்.. ஆன்மிக டச்..! மாஸ் என்ட்ரி... சீரடியில் சாய்பாபாவை தரிசித்த விஜய்..!!