இந்தியாவில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு என்ற பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது உலக அளவிலான புவிசார் அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய தாக்கம். முக்கிய காரணம் மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதை தடைபட்டுள்ளது.
இந்தியா தனது LPG தேவையில் சுமார் 60-65% இறக்குமதி செய்கிறது. அதில் 85-90% மேற்காசிய நாடுகளிலிருந்து வருகிறது. இந்த தடையால் இறக்குமதி கணிசமாக குறைந்துள்ளது. இதனால் உலக சந்தையில் LPG விலை உயர்ந்ததோடு, விநியோக சங்கிலியும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசு இதை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதலில், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் அவசர அதிகாரங்களைப் பயன்படுத்தி, அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் LPG உற்பத்தியை அதிகப்படுத்த உத்தரவிட்டது.

வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வணிக உபயோக சிலிண்டர்களின் விநியோகம் பல இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு, சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் ஹோட்டல்கள், உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல உணவகங்கள் தற்காலிகமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன; சில இடங்களில் மெனு குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு பதுக்கலைத் தடுக்கும் வகையில் முன்பதிவு விதிகளை கடுமையாக்கியுள்ளது.
இதையும் படிங்க: “கர்தவ்ய த்வார்”: திருச்சி ரயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர்..!! சு.வெங்கடேசன் கொந்தளிப்பு..!!
முன்பு 21 நாட்கள் இடைவெளியில் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்யலாம் என்றிருந்த நிலையில், தற்போது 25 நாட்கள் கட்டாய இடைவெளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுப்பங்கரையிலும் சர்வதேச அரசியல் என நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கருத்து தெரிவித்து உள்ளார். வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை என்றும் ஒரு சிலிண்டர் பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்ய முடியும் எனவும் ஹோட்டல்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார். சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் நேரடியாக நம் வீட்டு அடுப்பங்கரையிலும், அன்றாட உணவிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன என்று கூறினார்.
இதையும் படிங்க: TNPSC குளறுபடிகள்... TRANSFER போதுமா? நீதி விசாரணை நடத்த MP சு. வெங்கடேசன் வலியுறுத்தல்..!