இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை சரிசெய்யும் வழக்கமான சுருக்கமுறை திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஜூன் 24 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
இந்த அறிவிப்பு, வாக்காளர்கள் தங்கள் இந்திய குடியுரிமையை நிரூபிக்க பிறப்பு சான்றிதழ், பிறந்த இடம், 1981-க்கு பிறகு பிறந்தவர்கள் தங்கள் பெற்றோரின் பிறப்பிடம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியது.
மேலும், ஆதார் மற்றும் பான் அட்டைகள் இந்தச் சான்றாக ஏற்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை, பீகாரில் 2025 அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவசரமாக அறிவிக்கப்பட்டது. இது பல அரசியல் கட்சிகளிடையே சந்தேகத்தையும் எதிர்ப்பையும் தூண்டியது.
இதையும் படிங்க: என்ன ஆதாரம் இருக்கு..? இப்படியா பண்ணுவீங்க? ராகுல் காந்தி புகாருக்கு தேர்தல் ஆணையம் கேள்வி..!

வாக்காளர் சிறப்பு திருத்தத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. ஏனெனில் ஏராளமான மக்களின் வாக்குரிமையை இது பறிப்பதாக அமையும் என்று கூறி இருக்கின்றனர். இருப்பினும் முதலில் பீகாரில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடங்கப்பட்டு இந்தியா முழுவதும் நடைபெறும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதன்படி பீகாரில் வாக்காளர் சிறப்பு திருத்தம் நடத்தப்பட்டு வருகிறது. 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ளனர்.
வாக்காளர் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேர் விவரங்களை வெளியிட உத்தரவு பிறப்பித்துள்ளது. நீக்கப்பட்டுள்ள காரணத்துடன் 65 லட்சம் பேர் விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வரும் செவ்வாய்க்கிழமைக்குள் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இங்க வாலாட்ட முடியாது.. வாக்காளர் சிறப்பு திருத்தத்தை திமுக எதிர்க்கும்! என்.ஆர் இளங்கோ திட்டவட்டம்..!