சூர்யகாந்த் 1962 பிப்ரவரி 10 அன்று ஹரியானாவின் ஹிசாரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு ஆசிரியராக இருந்தவர், சட்டப் பின்னணி இல்லாத குடும்பம். சிறு வயதிலிருந்தே கிராமப்பள்ளியில் படித்த இவர், அறிவின் வெளிச்சத்தால் தனது வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்டார். 1981இல் ஹிசார் அரசுப் பட்டதாற்று கல்லூரியில் பட்டம் பெற்று, 1984இல் மகர்ஷி டேனானந்த் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் (LLB) வாங்கினார். அடுத்த ஆண்டே, ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழிலைத் தொடங்கினார்.
2007 முதல் 2011 வரை தேசிய சட்ட சேவை ஆணையத்தின் ஆளும் உறுப்பினராக இருந்து, ஏழை மக்களுக்கு சட்ட உதவியை வழங்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். இந்தக் காலகட்டத்தில் அவர் பல தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளை ஏற்பாடு செய்து, சட்ட விவாதங்களில் பங்கேற்று, தனது அறிவை விரிவுபடுத்தினார். 2011இல் குருக்ஷேத்திரா பல்கலைக்கழகத்தில் LL.M. பட்டத்தை முதல் மாணவனாகப் பெற்றது அவரது கல்வி ஆர்வத்தின் சான்று.

நீதிபதியாக அவரது பயணம் 2004இல் தொடங்கியது. 2018 அக்டோபர் 5இல் இமாச்சல் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். 2019 மே 24- ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக சூர்யகாந்த் உயர்த்தப்பட்டார். தற்போது, உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த டி ஆர் கவாய் ஓய்வு பெற்ற நிலையில் புதிய நீதிபதியாக சூரியகாந்த பதவியேற்றார்.
இதையும் படிங்க: #Breaking இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் நியமனம்... சத்தமே இல்லாமல் படைத்த வரலாற்றுச் சாதனை...!
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூரியகாந்த் 2027 பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை 15 மாதங்கள் பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, துணைநிலை ஆளுநர் சக்சேனா, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: புதிய தொழிலாளர் சட்டம் பிரதமரின் தற்சார்பு பாரத கனவு… நயினார் நாகேந்திரன் பெருமிதம்...!