தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்ட மசோதா 2025, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முக்கியமான சீர்திருத்தமாக அறிமுகமாகி, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவின் முதன்மை நோக்கம், மாநில அரசுக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கவும் முழு அதிகாரம் வழங்குவதுடன், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் நிதித்துறைச் செயலாளரை உறுப்பினராகச் சேர்ப்பதற்கும் வழிவகுக்கிறது.
உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. மசோதா மீது முடிவெடுக்காமல் அதனை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ரவி அனுப்பி இருந்தார். மசோதா மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டுள்ள தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்குமான மோதல் போக்கு நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது. தமிழக அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. கடந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: சாதியப் பெயர்கள் நீக்கம்... தமிழ்நாடு அரசு நடவடிக்கைக்கு திருமா உற்சாகம் வரவேற்பு...!
இதில், அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்த நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்து இருந்தார். இந்த நிலையில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விதமாக கூச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யார் மீதும் பழி போடாதீங்க…! மக்களின் பாதுகாப்பு முக்கியம்… நீதிமன்றம் திட்டவட்டம்…!