2021இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதிலிருந்து, அந்நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் காபூலில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தான் பொறுப்பானது என தலிபான்கள் குற்றம் சாட்டினர். 
இதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லையில் மாறி மாறி தாக்குதல் நடத்தின. இப்போது, துருக்கியின் மத்தியஸ்தத்தில் நடைபெறும் அமைதிப் பேச்சுகள் தோல்வியடைந்தாலும், நவம்பர் 6 அன்று இஸ்தான்புல்லில் மீண்டும் உயர் ஸ்தர பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை போர்நிறுத்தம் தொடரும் என இரு தரப்பும் உறுதியளித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையிலான 2,600 கி.மீ. நீளமுள்ள டுரண்ட் எல்லை, 2021 தலிபான் ஆட்சியிலிருந்து அமைதியின்மைக்கு முகமாக உள்ளது. பாகிஸ்தான், தீவிரவாதிகளான டெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) ஆப்கானில் இருந்து தங்கள் நாட்டை தாக்குவதாக குற்றம் சாட்டுகிறது. 
இதையும் படிங்க: இந்தியாவுடன் நட்பு பாராட்டும் ஆப்கான்! பாக்., வயிற்றெரிச்சல்! தக் ரிப்ளை கொடுத்த அமைச்சர்!
இதற்கு ஆப்கானிஸ்தான் மறுத்து, பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்கள் தங்கள் இறையாண்மையை மீறுவதாகக் கூறுகிறது. கடந்த மாதம், எல்லையில் நடந்த கடுமையான மோதலில் இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டனர் – 2021க்குப் பிறகு இது மிக மோசமான சம்பவமாக பார்க்கப்படுகிறது.  இதைத் தீர்க்க, கத்தாரின் தோஹாவில் அக்டோபர் 19 அன்று பாதுகாப்பு அமைச்சர்கள் கையெழுத்திட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் போன்றது. 
அதைத் தொடர்ந்து, துருக்கி-கத்தார் மத்தியஸ்தத்தில் இஸ்தான்புல்லில் நடந்த இரண்டாம் கட்ட பேச்சு, மூன்று நாட்கள் நீடித்து தோல்வியடைந்தது. பாகிஸ்தானின் முக்கிய கோரிக்கை – TTP போன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஏற்கப்படவில்லை. "ஆப்கானிஸ்தான் ஒப்புக்கொள்ளவில்லை" என பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார் கூறினார். 
 இருப்பினும், துருக்கி வெளியுறவுத்துறை அறிவிப்பின்படி, நவம்பர் 6 அன்று உயர் ஸ்தர பேச்சு நடக்கும். அதுவரை போர்நிறுத்தம் தொடரும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், மனிதநேய உதவிகள் ஆகியவற்றை பாதிக்கும் எல்லை மூடல் பிரச்சினைக்கு தீர்வு தரலாம். 
இந்தப் பேச்சுத் தோல்விக்குப் பிறகு, இரு தரப்பிலும் கடுமையான அறிக்கைகள் வெளியானன. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், "தலிபான்கள் இந்தியாவின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடுகின்றனர். ஆப்கானிஸ்தானை கைப்பாவை போலப் பயன்படுத்தி, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக மறைமுகப் போர் தொடுக்கிறது" என குற்றம் சாட்டினார். "ஒப்பந்தத்தை அருகில் அடையும்போதெல்லாம் தலீடு நடக்கிறது. ஆப்கானிஸ்தானின் கண்களைப் பிடுங்கி எறிவோம். எங்களுக்கு எதிராக போர் தொடுத்தால், 50 மடங்கு வலிமையான பதிலடி கொடுப்போம்" என அவர் எச்சரித்தார்.  ஆசிப், இந்தியாவின் செல்வாக்கால் தலிபான்கள் TTPவை ஆதரிப்பதாகவும் கூறினார். 
இதற்கு பதிலாக, ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் சிராஜூதின் ஹக்கானி கடுமையான எச்சரிக்கை விடுத்தார். "நாம் அனைவரும் முஸ்லிம்கள், சகோதரர்கள். ஆனால், சிலர் (பாகிஸ்தான்) தெரிந்தோ தெரியாமலோ நெருப்புடன் விளையாடுகின்றனர். நாங்கள் போரை விரும்பவில்லை. 

ஆனால், எங்கள் பிராந்தியத்தை காப்பாற்றுவதற்கு முன்னுரிமை கொடுப்போம். உங்கள் உள்நாட்டு பிரச்சினைகளை இங்கு கொண்டுவந்தால், இது உங்களுக்கு பெரும் விலை கொடுக்கும்" என அவர் கூறினார். "நீண்ட தூர ரக மிசைல்கள் இல்லை, ஆனால் நமது தீர்மானம் வலுவானது. பொறுமையை சோதித்தால், பேரழிவான பதிலடி வரும்" என ஹக்கானி சமூக வலைதளத்தில் வீடியோவில் எச்சரித்தார். 
இந்த மோதலுக்கு நடுவில், ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு புதிய சவாலை எழுப்பியுள்ளது. காபூல் நதியின் கிளை ஆறும், பாகிஸ்தானுக்குள் பாயும் குனார் நதியில் (காபூல் நதியின் முக்கிய கிளை) உடனடியாக அணை கட்டும் திட்டத்தை தொடங்க உத்தரவிட்டுள்ளது. தலிபான் உச்சத் தலைவர் ஹிபதுல்லா ஆகுந்த்சதா இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார். இந்த அணை, ஆப்கானிஸ்தானின் நீர் உரிமைகளை உறுதிப்படுத்தவும், நீர்மின் சக்தி உற்பத்திக்கும் உதவும். ஆனால், இது பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் குடிநீர் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. 
 இந்தியாவின் இந்துஸ் நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததைப் போல, இது பாகிஸ்தானுக்கு 'நீர் ஆயுதம்' போன்ற சவாலாக மாறலாம். ஆப்கானிஸ்தானின் நீர்-ஆற்று அமைச்சு, உள்ளூர் நிறுவனங்களுடன் விரைவாக வேலை தொடங்கும் என தெரிவித்துள்ளது. 
இதையும் படிங்க: இந்தியாவுடன் நட்பு பாராட்டும் ஆப்கான்! பாக்., வயிற்றெரிச்சல்! தக் ரிப்ளை கொடுத்த அமைச்சர்!