• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்! 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு! சென்னைக்கும் எச்சரிக்கை!

    இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காலை புயலாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Sun, 25 Oct 2026 08:16:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-weather-alert-cyclone-arnab-red-alert-october-25

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று (அக்டோபர் 25) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தீவிரமடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    20 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு

    தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 20 செ.மீட்டருக்கும் அதிகமான அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்த மூன்று மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சென்னையில் தொடர் மழை! களமிறங்கிய மேயர் பிரியா! பெரம்பூர், புளியந்தோப்பில் நேரடி ஆய்வு!

    கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ChennaiRain

    நீலகிரியில் கொட்டித் தீர்த்த கனமழை

    கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் பர்லியாரில் அதிகபட்சமாக 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கீழ் கோத்தகிரி எஸ்டேட் பகுதியில் 20 செ.மீ. மழையும், குன்னூரில் 17 செ.மீ. மழையும் பெய்துள்ளது. மலைப்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருப்பதை இந்த மழைப்பதிவுகள் காட்டுகின்றன.

    புயலாக வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

    மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்தடுத்த நிலைகளில் வலுப்பெற்று தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காலை புயலாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நகரும் இந்த அமைப்பு, அக்டோபர் 28ஆம் தேதி காலை ஆந்திரக் கடலோரப் பகுதிக்கு அருகில் செல்ல வாய்ப்புள்ளது.

    நாளையும் தொடரும் கனமழை எச்சரிக்கை

    அக்டோபர் 26ஆம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி, கோவை, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யக்கூடும். அக்டோபர் 27ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த ‘அர்னாப்’ என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. வங்க மொழியில் அர்னாப் என்பதற்கு கடல் என்று பொருள். புயலின் நகர்வு மற்றும் மழையின் தீவிரத்தைப் பொறுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வானிலை நிலவரம் மாறக்கூடும்.

    இதையும் படிங்க: இரவு முழுவதும் கொட்டிய மழை!! அதிகாலையிலேயே களமிறங்கிய அமைச்சர் அருண்ராஜ்! நேரடி ஆய்வு!

    மேலும் படிங்க
    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு
    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    தமிழ்நாடு
    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழ்நாடு
    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share