2006-2011 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில், தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகவும், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தனர். இந்தக் காலகட்டத்தில், அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை மீது ரூ.76.40 லட்சம் மதிப்பிலான சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி மற்றும் தொழிலதிபர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீது ரூ.44.56 லட்சம் மதிப்பிலான சொத்து குவிப்பு வழக்கு 2012-ல் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2022 மற்றும் 2023-ல் இரு அமைச்சர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் விடுவிக்கப்பட்டனர். இந்த விடுவிப்பு உத்தரவுகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து இந்த வழக்குகளை மறு ஆய்வுக்கு எடுத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மறு விசாரணை உத்தரவு2023 ஆகஸ்ட் மாதம், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தின் விடுவிப்பு உத்தரவுகளை ரத்து செய்து, வழக்குகளை தினந்தோறும் விசாரிக்கவும், குற்றச்சாட்டுகளை மீண்டும் பதிவு செய்து சாட்சி விசாரணையைத் தொடங்கவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதையும் படிங்க: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மருத்துவமனையில் அனுமதி..!
இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அவகாசம் கோரியது. அப்போது இந்த வழக்கில் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாமல் கூடுதல் அவகாசம் கேட்பது ஏன் என்றும் நாங்கள் வழக்குகளைப் படித்து விட்டு வந்தால் நீங்கள் அவகாசம் கூறி தள்ளி போடுகிறீர்கள் என்று அதிருப்தி தெரிவித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை அவகாசம் கூறியதன் காரணமாக இரண்டு வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: #BREAKING: சிறப்பு வாக்காளர் திருத்தப்பணி நாடு முழுவதும் அமல்..! சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!