ஆன்லைன் மோசடி கும்பல்கள் எப்படி புது, புது வழிகளைக் கண்டுபிடித்து திருடுகிறார்களோ?, அதேபோல் புதிது, புதிதாக திருடர்களும் தங்களது டெக்னிக்குகளை மாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வயதான மூதாட்டி ஒருவரிடம் தூரத்து உறவினர் போல் பேச்சுக்கொடுத்த நபர் ஒருவர், தனது மனைவிக்கு உங்கள் கழுத்தில் இருப்பது போன்றே செயின் செய்ய வேண்டும் கழட்டிக்கொடுங்கள் பார்த்துவிட்டு தந்துவிடுகிறேன் எனக்கூறி வாங்கிய, அடுத்த நொடியே பைக்கில் பறந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
இந்த நூதன திருட்டு குறித்து மக்கள் முழு விழிப்புணர்வு அடையும் முன்பே உதவ வருபவர்களை ஏமாற்றி அவர்களது செல்போனை திருடிச் செல்லும் நபர்களின் அட்ராசிட்டி வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சீனிவாச மங்காபுரம் அருகே ஒரு கட்டிட மேஸ்திரி அங்கு நடைபெறும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை பார்வையிடுவதற்காக பைக்கில் வந்தார்.
அவரைப் பின் தொடர்ந்து வந்த மற்றொருவர் கட்டிடத்தின் முன்பு போடப்பட்டிருந்த மணலில் பைக் சிக்கி கீழே விழுவது போன்று நாடகம் ஆடினர். இதனை பார்த்து உதவி செய்ய மேஸ்திரி சென்றார். அப்பொழுது பைக்கில் வந்த அவரது கூட்டாளி மேஸ்திரியின் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்துக் கொள்ள, இருவரும் ஒன்றாக சேர்ந்து பைக்கில் தப்பி சென்றனர்.
இதையும் படிங்க: நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்... இலவச தரிசனம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு...!
சிறிது நேரத்தில் தனது பக்கெட்டில் இருந்த செல்போன் திருடி சென்றதை மேஸ்திரி அங்குள்ளவர்களிடம் கூறி சந்திரகிரி போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து அங்கிருந்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பதி செல்வோர் கவனத்திற்கு... தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு...!