நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 (இன்று) முதல் ஆகஸ்ட் 12 வரை டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு வரி விதிப்பு, விளையாட்டு, கல்வி, சுரங்கம், கப்பல் போன்ற துறைகள் தொடர்பாக 8 முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் பல முக்கிய பிரச்சினைகளை எழுப்பவும், அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் வியூகம் வகுத்துள்ளன. குறிப்பாக பகல் காம் சம்பவம் தொடர்பாகவும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பகல் காம் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். மத்திய அமைச்சர்களின் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளாமல் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் மோடி உரையாற்றினார். ஆரோக்கியமான விவாதங்கள் மேற்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆக்சிஜியம் 4 திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு சென்று திரும்பிய சுபான்ஷூ சுக்லாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அவர், விண்வெளி துறையில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது என்றார். ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியாவின் ராணுவ பணத்தை உலக நாடுகள் கண்ட வியந்ததாகவும், தீவிரவாதிகளை அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று அழித்ததாகவும் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானின் தீவிரவாத கட்டமைப்பை மண்ணுக்கு அடியில் புதைத்து விட்டதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்தது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்னைக்குமே DMK தான் மாஸ்! ஏன் தெரியுமா..? TKS சொன்ன சீக்ரெட்..!
இந்த நிலையில், பிரதமரின் உரை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் விமர்சனங்களை முன் வைத்தார். அப்போது பிரதமர் மோடி மைக்குகளை நோக்கி மட்டுமே உரையாற்றியதாகவும் பத்திரிக்கையாளர்களை நோக்கி அல்ல என்றும் தெரிவித்தார். எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்க மாட்டார் என்று தெரிவித்த டி கே எஸ் இளங்கோவன், மீண்டும் ஒருமுறை அதையே செய்துள்ளார் என்றும் அவர் சொல்வது இதுவரை நடந்ததில்லை, இப்போதும் கூட அது நடக்கப்போவதில்லை என்றார்.
இதையும் படிங்க: முடிச்சு விட்டாய்ங்க.. அதிமுகவை சீரழிக்கவே பாஜகவோடு கூட்டணி..! Ex எம்.பி அன்வர் ராஜா குற்றச்சாட்டு..!