தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஒதுக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
மனதை விசாரித்த நீதிபதி, வீடியோ காட்சிகளை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது என தெரிவித்தார். கரூரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளது என்றும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றும் அரசு அமைதியாக இருக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகம் என்ன மாதிரியான கட்சி, அந்த இடத்தில் இருந்து அனைவரும் பறந்து விட்டனர் என வேதனை தெரிவித்தார் நீதிபதி. இந்த நிலையில், கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது. வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. சிறப்பு குழுவை நியமனம் செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: 10 ஆயிரம் பேர் என எப்படி சொன்னீங்க? தவெகவுக்கு நீதிபதி சரமாரி கேள்வி…!
இதற்கிடையில், கரூர் துயர சம்பவத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள ஐஜி அஸ்ரா கார்க்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குழுவில் நாமக்கல் எஸ்.பி. விமலா, CSCID எஸ்.பி. ஷியாமலா தேவி ஆகியோரை இணைத்துக் கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேவையான உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கரூர் கோரச் சம்பவம்! தவெக நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜர்... தொடரும் பதற்றம்...!