தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், மதுரை விமான நிலையத்திலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாரபத்தி கிராமத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தை எழுதுவதற்கு அடித்தளமாக இந்த மாநாடு அமைந்தது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாடு, 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, கட்சியின் செல்வாக்கை தென் மாவட்டங்களில் வலுப்படுத்துவதற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது தொண்டர்கள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் விஜய் உரையாற்றினார். 2026 தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் களமிறங்கும் ஒவ்வொரு வேட்பாளரும், வேறு யாரும் இல்லை அது நான்தான் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை நீங்கள் வெல்ல வைத்தால் விஜயாகிய என்னையே வெல்ல வைத்ததாகவே அர்த்தம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: STALIN UNCLE… Its Wrong uncle! மதுரை மாநாட்டில் முதல்வரை விளாசிய விஜய்

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இந்த விஜய் தான் வேட்பாளர், நானும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களும் வேறு அல்ல என்று தெரிவித்தார். நீங்கள் எனது ரத்த உறவு, கூடப்பிறந்த பிறப்பு, ரேஷன் கார்டில் பெயர் இல்லை என்றாலும் நாம் எல்லோரும் ஒன்று தான் என்று கூறினார். I enjoy people., I respect people., I worship people என்று கூறினார்.
திரைக்களத்தில் மார்க்கெட் போன பிறகு அரசியலுக்கு தான் வரவில்லை என்றும் மார்க்கெட் போன பின்னர் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வந்தவன் தான் கிடையாது., படைக்களத்துடன் வந்தவன் என்று கூறினார்.
இதையும் படிங்க: ரெடியா மாமே? தவெக மாநாடு... தெறிக்கவிடும் தொண்டர்கள்..!