இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட நாளா பதற்றமான உறவு இருந்து வருது. இப்போ, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்த உறவை மேலும் மோசமாக்கியிருக்கு. ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22-ல் நடந்த இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்குதுன்னு குற்றம் சாட்டியது.
இதனால், இந்திய அரசு பல கடுமையான முடிவுகளை எடுத்தது. அதுல முக்கியமானது, 1960-ல் போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (Indus Waters Treaty) ரத்து செய்தது. இந்த ஒப்பந்தப்படி, சிந்து, ஜீலம், செனாப் ஆறுகளோட நீர் பாகிஸ்தானுக்கு செல்றது. ஆனா, இப்போ இந்தியா இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி, பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய 80 சதவிகித நீரை நிறுத்தப் போவதாக அறிவிச்சிருக்கு. இது பாகிஸ்தானை கடுப்பாக்கி இருக்கு.
இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கார். “எங்களுக்கு சொந்தமான ஒரு சொட்டு தண்ணீரைக் கூட இந்தியாவால பறிக்க முடியாது. எங்களோட நீரை நிறுத்துவோம்னு மிரட்டறீங்க, அப்படி ஒரு முயற்சி செஞ்சீங்கன்னா, உங்களால மறக்க முடியாத பாடத்தை பாகிஸ்தான் கத்துக்கொடுக்கும்”னு அவர் ஆவேசமா பேசியிருக்கார்.
இதையும் படிங்க: 2030 காமன்வெல்த் தொடர்.. இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிக்கு IOA ஒப்புதல்..!!

இது மட்டும் இல்ல, பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர், அமெரிக்காவுக்கு பயணம் போனப்போ, “இந்தியா சிந்து நதியில் அணை கட்டினா, அதை பத்து மிஸைல்களால தகர்ப்போம். நாங்க அணு ஆயுத நாடு, எங்களை அழிக்க நினைச்சா, பாதி உலகத்தை அழிச்சிடுவோம்”னு மிரட்டியிருக்கார்.
இதே மாதிரி, பாகிஸ்தானோட முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, “சிந்து நதி ஒப்பந்தத்துல மாற்றம் செஞ்சா, அது போருக்கு வழிவகுக்கும்”னு எச்சரிச்சிருக்கார். கடந்த 48 மணி நேரமா பாகிஸ்தான் தரப்புல இருந்து இப்படி தொடர் மிரட்டல்கள் வந்துட்டு இருக்குது.
இந்த சிந்து நதி ஒப்பந்தம் ரொம்ப முக்கியமானது. 1960-ல் உலக வங்கி மத்தியஸ்தத்துல இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த ஒப்பந்தத்தை போட்டாங்க. இதன்படி, சிந்து, ஜீலம், செனாப் ஆறுகளோட நீர் பாகிஸ்தானுக்கு, ரவி, பியாஸ், சட்லெஜ் ஆறுகளோட நீர் இந்தியாவுக்கு கிடைக்கும்.
ஆனா, இந்தியா இப்போ இந்த ஒப்பந்தத்தை ஒருதலைபட்சமா நிறுத்தியிருக்குது. இதனால, பாகிஸ்தானோட விவசாயம், பொருளாதாரம், மின் உற்பத்தி எல்லாமே பெரிய பாதிப்புக்கு உள்ளாகலாம். பாகிஸ்தான் இதை “எங்களோட உயிர்நாடியை தாக்குற முயற்சி”னு சொல்றாங்க.
இந்திய தரப்புல இருந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையா இந்த முடிவு எடுக்கப்பட்டதா சொல்றாங்க. ஆனா, பாகிஸ்தான் இதை “போருக்கு சமமான செயல்”னு கருதுது. இந்த மிரட்டல்கள் வெறும் வார்த்தைகளாவா இருக்கும், இல்லை உண்மையிலேயே பெரிய மோதலுக்கு வழிவகுக்குமான்னு தெரியல.
இந்தியாவோட இந்த முடிவு, பாகிஸ்தானை மட்டுமல்ல, பிராமபுத்திரா நதி மூலமா இந்தியாவுக்கு நீர் வழங்குற சீனாவையும் எச்சரிக்கையா இருக்க சொல்லுது. சீனா இதே மாதிரி இந்தியாவுக்கு நீரை நிறுத்தினா, இந்தியாவும் பாதிக்கப்படலாம்.
இதையும் படிங்க: 50 பேருக்கு ஒரே அப்பா! மோடி வெற்றிக்கு ஆப்பா? வாரணாசி வாக்காளர் பட்டியலால் வெடித்தது சர்ச்சை!!