பயங்கரவாத முகாம்களை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் ஆபரேஷன் சிந்தூர் பெயருக்கான காரணம் தெரிய வந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலின் போது ஆண்கள் மட்டுமே பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதன் மூலம் கனவருடன் சுற்றுலா சென்று பெண்கள் தங்கள் கண் எதிரிலேயே கணவன், தந்தை, சகோதரன் என ஆண்களை இழந்தனர். குறிப்பாக திருமணமான பெண்கள் பயங்கரவாதிகள் தங்கள் சுமங்கலி கோலத்தை இழந்தனர். அதாவது, பெண்களின் சென்டிமெண்டாகக் கருதப்படும் குங்குமத்தை இழந்தனர்.

பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாகதான் தற்போது இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தி அழித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு 'சிந்தூர் ஆபரேஷன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 'சிந்தூர்' என்பது குங்குமம் என்று பொருள். அதாவது, பயங்கரவாதிகளின் தாக்குதலில் அன்புக் கணவர்களை இழந்து குங்குமத்தை இழந்த பெண்கள் நீதி கிடைக்கும் வகையில் இந்தத் தாக்குதலுக்கு 'சிந்தூர்' எனப் பெயரிட்டுள்ளது எனக் கருதுவதாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கணேசன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எதையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார்.. முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவசர ஆலோசனை!

'சிந்தூர்' என்கிற பெயரில் இடம் பெற்றுள்ள 'ஓ' என்கிற வார்த்தையில் சிவப்பு நிறத்தில் குங்குமம் போலவும், குங்குமம் அழிந்தது போலவும் அந்த வார்த்தை டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆக, குங்குமத்தை இழந்த பெண்களுக்காக நீதி வழங்கும் வகையில் அந்தப் பெயரிலேயே பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி..! பல்வேறு விமானங்கள் ரத்து.. பயணிகளை உஷார்ப்படுத்தும் நிறுவனங்கள்..!