எல்லோரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுங்கள், வங்கிகளுக்கு அலைய வேண்டாம் என்று தொடர்ச்சியாக விளம்பரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் செலுத்த மக்களைக் கட்டாயப்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சண்முகம் பி கடுமையாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பாகத் தமது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆரம்பத்தில் பொதுமக்கள் மீதான அக்கறை காரணமாகவே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படுவதாக அனைவரும் நம்பியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தற்போது கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் ஒன்றிய அரசின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டதாகச் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: "ஏழைகளின் சோற்றில் மண்ணள்ளி போடும் மோடி அரசு! சிபிஎம் தலைவர் பி. சண்முகம் கண்டனம்!

பிரதமர் மோடி எதைச் சொன்னாலும் அதில் மக்கள் நலன் கடுகளவும் இருக்காது என்பதற்கு இந்த டிஜிட்டல் கட்டண நடவடிக்கையே மற்றுமொரு தெளிவான உதாரணம் என்று விமர்சித்த அவர், பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான கட்டண யோசனையை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்திற்கு பாரத ரத்னா! பிரதமர் மோடியை சந்தித்து எல்.கே. சுதீஷ் எம்பி கோரிக்கை!