விருத்தாசலத்தில் பாலக்கரை அம்மா உணவகம் முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களிடையே உரையாற்றத் தொடங்கினார். அப்போது,
விருத்தாசலம் பகுதி வேளாண்மை விவசாயி நிறைந்த பகுதி விருத்தாசலம் சுற்றியிருக்கிற பகுதி கடலூர் மாவட்டம் விவசாயம் செய்த மாவட்டம் வேளாண்மை தொழில் பிரதான தொழில் இங்கு தொழில் சிறக்க அண்ணா திமுக ஆட்சியில் நிறைய திட்டங்கள் செய்து கொடுத்திருக்கிறோம் திராவிட முன்னேற்ற கட்சி வேளாண்மை துறை அமைச்சர் இந்த மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா விவசாயம் செய்திருக்கிறாரா? விவசாய தொழிலாளிக்கு செய்துள்ளாரா ஒன்றுமே செய்யவில்லை இந்த அரசாங்கம் விளம்பர செய்யும் அரசாங்கம் என குற்றச்சாட்டினார்.
சாதனைகள் குறித்து பேச நான் தயார்; கூட்டத்தை ஏற்பாடு செய்து அழையுங்கள். நான் வருகிறேன்- மு.க ஸ்டாலின் தயாரா?, அதிமுக ஆட்சியில் எத்தனை கல்லூரிகள் திறக்கப்பட்டத? திமுக ஆட்சியில் எத்தனை கல்லூரி திறக்கப்பட்டது தெரியுமா? என்று கூறி பட்டியலிட்டார். 2030ல் உயர்கல்வியில் அடைய வேண்டிய இலக்கை, 2019 அடைந்து விட்டோம். உயர் கல்வியில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடத்தை கொண்டு வந்தோம். மு க ஸ்டாலின் அவர்களே எந்த இடத்திலும் பொதுக்கூட்டம் போட்டு அழையுங்கள். எங்க சாதனை குறித்தும் உங்கள் சாதனை குறித்தும் பேசுவோம். இதற்கு நீங்கள் தயாரா? புள்ளி விவரத்தில் சாதனை குறித்து எங்களால் பேச முடியும் என்றார்.
திமுகவில் அதிக முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அண்ணன் துரைமுருகன். அவருக்கு ஏன் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கவில்லை. ஏனென்றால் கருணாநிதி குடும்பத்தில் அவர் பிறக்கவில்லை. நாம கூட்டணி சேர்ந்தால் பாஜக மதவாத கட்சி என்று விமர்சனம் செய்கிறார்கள். எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை, ஸ்டாலின் அவர்களே. என் மீது வழக்கு போட்டீர்கள். இதைக் கண்டு பயப்படாமல் வாழ்க்கை நடத்தி நிரபராதி என்று நிரூபித்தவன் இந்த பழனிச்சாமி.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் வரும் 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.. மக்களுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்..!
நான் முதல்வராக இருந்த காலத்தில் யார் மீதும் பொய் வழக்கு போடல. வழக்கு பதிவு செய்யவில்லை. அடிமட்டத்திலிருந்து உழைப்பால் உயர்ந்து இந்த இடத்துக்கு வந்துள்ளேன். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி கட்சியும் அதே இடங்களை பிடிக்கும். அரசுப் பள்ளியில் ப வடிவில் அமர்ந்து கல்வி கற்பிக்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு கழுத்து வலி ஏற்படும். விருத்தாசலத்தில் புறநகர் பேருந்து நிலையம், சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை, விளையாட்டு அரங்கம் அதிமுக ஆட்சியில் அமைக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: கன்னடத்து பைங்கிளி.. சரோஜா தேவி மறைவு பேரிழப்பு! இபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல்..!