ஈரோட்டில் திருமணம் மற்றும் கட்சி நிர்வாகியின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
5.ம் தேதி எதை பற்றி பேச உள்ளீர்? என்ற கேள்விக்கு, 5.ம் தேதி எதைப்பற்றி பேசுவேன் என்பது 5.ம் தேதி தான் தெரியும் என பதிலளித்தார்.
கட்சி குறித்தா.?, அதிமுக-பாஜக கூட்டணி குறித்தா.? ஓபிஎஸ், சசிகலா இணைப்பு குறித்தா.? அல்லது அதிமுக.வில் விலகி திமுக.வில் இணைகிறீர்களா.? புது அணி அமைத்து தவெக வுடன் கூட்டணியா?. இதில் எது குறித்து பேச உள்ளீர்கள் என்ற கேள்விக்கு..?
இதையும் படிங்க: "டேய்..கொடியை இறக்குடா" ... பாஜக தொண்டர்களை ஒருமையில் விளாசிய செல்லூர் ராஜு...!
"நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை, நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை" என்ற பாடல் வரிகளை சொல்லி பதில் அளித்தார்..
மூத்த நிர்வாகியான உங்களுக்கு அதிமுக.வில் முக்கியத்துவம் தரப்படவில்லை, கட்சியினர் கண்டுகொள்வதில்லை என சொல்லப்படுகிறதே.?
5.ம் தேதி பதில் அளிக்கிறேன் என ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தால் உச்சக்கட்ட டார்ச்சர்... முதல்வர் வெளிநாடு சென்ற கேப்பில் வேலையைக் காட்டிய அரசு ஊழியர்கள்...!