கூட்டணி வைப்பதற்காக அதிமுக யாரிடமும் தவம் கிடக்க வேண்டிய அவசியம் கிடையாது அதிமுகவை நாடிதான் கூட்டணி கட்சிகள் வந்து கொண்டிருக்கின்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 226வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாரில் அமைந்திருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, சண்முகநாதன், செல்ல பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், கரூர் விவகாரத்தில் உண்மை நிலவரம் வெளிவர வேண்டும் என்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குரல் கொடுக்கிறார். கூட்டணி வைப்பதற்காக அதிமுக யாரிடமும் தவம் கிடக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதிமுகவை நாடி கூட்டணி கட்சிகள் வந்து கொண்டிருக்கிறது. பக்குவப்பட்ட தலைவராக எல்லோரையும் ஒருங்கிணைக்க கூடிய தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உயர்ந்துள்ளார் என்றார்.
இதையும் படிங்க: தமிழ் ஆளுங்க வேண்டாம்; வட நாட்டுக்காரங்கள அனுப்புங்க.. அமித் ஷாவிற்கு விஜய் அனுப்பிய மெசெஜ்...!
சட்டமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்து வைக்கும் கருத்துக்கள் எல்லாம் கரூர் சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 41 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் . அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் எங்களுடைய பொதுச்செயலாளர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கரூர் சம்பவம் நடைபெற்ற போது அங்குள்ள காவல்துறை கொடுத்த செய்திக்கும் தற்போது தமிழக முதல்வர் கொடுக்கும் செய்திக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக கூறினார்.
சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசிய கருத்துக்களும் வெளியே சொன்ன கருத்துக்களிலும் உண்மை இருக்கிறது. அதைத்தான் மக்களும் என்று பேசிக் கொண்டிரு க்கின்றனர். கரூர் சம்பவம் பற்றி அரசிடமிருந்து தெளிவான விளக்க வேண்டும் என்பதைத்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து எடுத்து கூறி வருகிறார் என்றார்.
தவெகவை கூட்டணிக்கு அழைத்ததா அதிமுக?
சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டபோது கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோசமிட்டனர். உடனே எடப்பாடி பழனிச்சாமி, “பாருங்க கொடி பறக்குது. கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு. ஸ்டாலின் அவர்களே இந்த ஆராவரம் உங்க செவியை துளைக்கும்” என்றெல்லாம் பேசினார்.
அடுத்த நாளே தவெக கொடியை பிடித்தவர் அதிமுக தொண்டர் என போட்டோக்கள் வெளியாகின. தன் கட்சியின் தொண்டர்களை வைத்தே விஜயின் தவெக கொடியை தனது கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தூக்கி பிடிக்க வைத்திருக்கிறார். விஜயின் தலைமையிலான கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தயாராகிவிட்டார். அந்த அளவுக்கு அதிமுக பலவீனமாகிவிட்டது என விமர்சனங்கள் எழுந்தன. மறுநாளில் இருந்தே தவெக கொடிகளை தனது சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்வதை தவிர்த்தார். அதேபோல் தவெக கொடியை தங்கள் கட்சி தொண்டர்களை வைத்து தூக்கிப்பிடிக்கச் சொல்லும் அளவிற்கு அதிமுக மோசமாகிவிடவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில் கூட்டணிக்காக அதிமுக தவம் கிடைக்கவில்லை என ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருப்பது தவெகவிற்கான பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “மாடு மேய்க்குறவன் கூட இப்படி பேச மாட்டான்...” - அன்புமணியை மட்டுமல்ல விஜயை விட்டு விளாசிய ராமதாஸ்...