சட்டத்தின் பக்கம் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டுமே தவிர, த.வெ.க கட்சியை வளர்ப்பதற்கு அரசு இயந்திரத்தை பயன்படுத்தினால் இப்படித்தான் சம்பட்டி அடி கிடைக்கும். உயர் நீதிமன்ற நீதியரசர்கள் த.வெ.க அரசிற்கு உச்சந்தலையில் ஆணி அடித்தால் போல் தீர்ப்பளித்துள்ளார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு
டெல்டா பகுதி வறட்சி பகுதியாக நாம் பார்க்கிற போது நம் நெஞ்சம் பதறுகிறது .கர்நாடகா தண்ணீரை திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது ஜூன், ஜூலை மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கொடுக்காமல் பயிர்கள் காய்வதை பார்த்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்கு என்ன போர்க்கால நடவடிக்கையை த.வெ.க.அரசு எடுத்திருக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், நாம் பெற வேண்டிய உரிமை பறிபோய் கொண்டே இருக்கிறது. மேல்முறையீடு செய்ய த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்குமா?. ஏனென்றால் மேகதாது அணை பிரச்சனை இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. மேகதாது அணைக்கட்ட கர்நாடகாவுக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவை இல்லை என்ற அதிரடி பதிலை மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் பார்லிமெண்டில் தெரிவித்து இருப்பதால் அதிர்ச்சியிலே உறைந்து போய் இருக்கிறது தமிழகம்.
இதையும் படிங்க: "விஜய் அண்ணாச்சி... அரிசி விலை என்னாச்சு?" ... தவெக அரசுக்கு செக் வைத்த ஆர்.பி.உதயகுமார்...!
இப்போது கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.
தன்னை பார்க்க வந்தவர்கள் இறந்து போனார்கள் என்பதற்காக அரசு நிர்வாகத்தை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், என்கிற கோமாளித்தனத்தை தலையில் கொட்டு வைத்து, சட்டத்தை புரிய வைத்து ,சட்டத்தின் ஆட்சிதான் என்றைக்கும் மேலோங்கி இருக்கும் என்பதை நீதியரசர்கள் இந்த நாட்டிற்கு உணர்த்தியுள்ளார்கள்.
இந்த சட்டத்திற்கு புறம்பாக நியமனங்கள் அரசியல் அமைப்பின் 14 மற்றும் 16வது பிரிவின் கீழ் இந்த நாட்டின் குடிமகனுக்கு வழங்கப்படும் உத்தரவாதத்தை நேரடியாக மீறுகிறது, அரசின் கொள்கை முடிவு சட்டத்திற்கு எதிராக இருந்தால் அதில் நீதிமன்றம் தலையிடலாம் என்பதையும் இந்த தீர்ப்பு கோமாளி கூட்டத்துக்கு உணர்த்தி இருக்கிறது.
நாட்டில் எத்தனையோ உயிர்கள் அசம்பாவிதங்களால்,விபத்துகளால், எதிர்பாராத பேரிடர் காலங்களிலே உயிர் இழப்புகள் ஏற்படும் போது, அவர்களுக்கெல்லாம் எப்படி அரசு வேலை தர முடியும். அரசு வேலைக்காக கோடிக்கணக்கான பேர் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்களே என்கிற, அந்த அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த கோமாளி கூட்டத்தை வைத்து நான் எப்படி மேகதாது பிரச்சனையை சரி செய்ய போகிறோம், காவிரி உரிமை காப்பாற்ற போகிறோம், பெண்கள் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்த போகிறோம்,
சட்ட ஒழுங்கு சீரழிவை எப்படி தடுக்க போகிறோம்? போதைப் பொருள் நடமாட்டத்தை எப்படி நாம் நிறுத்தப் போகிறோம் இன்று ஒன்று நமக்கு புரியவில்லை.எங்களுக்கு சாரி வேண்டாம் நீதி தான் வேண்டும் என்று லாக்கப் டெத்துக்கு போர்குரல் எழுப்பிய முதல்வர் விஜய் இப்போ எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை
இன்றைக்கு தமிழகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அணைகளில் தண்ணீர் பற்றாக்குறை, பாசனஏரியில் நீர்பற்றாக்குறை, நிதி நிலைமையிலே பற்றாக்குறை ,கடன் அளவு வான்அளவு உயர்ந்திருக்கிறது, இந்த நிலையில் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.
இதிலே மூன்று நாட்கள், நான்கு நாட்கள் திடீர், திடீரென்று தலைமைச் செயலகத்தில் தலை காட்டாமல் முதல்வர் விஜய் உள்ளார். கோமாளி கூட்டத்தில் இந்த கோட்டையை ஒப்படைத்தால், கோட்டையிலே ஓட்டை விழுந்து விடுகிறது என்பதற்கு தான் இன்றைக்கு உயர் நீதிமன்ற தீர்ப்பு உச்சந்தலையில் ஆணி அடித்தது போல, மக்களின் பக்கம், சட்டத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம், தர்மத்தின் பக்கம் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டுமே தவிர, த.வெ.க கட்சியை வளர்ப்பதற்கு அரசு இயந்திரத்தை பயன்படுத்தினால் இப்படித்தான் சம்பட்டி கிடைக்கும் என்பதற்கு இந்த நீதியரசர்களின் தீர்ப்பை சாட்சியாக இருக்கிறது.
மொத்தத்தில் கோமாளிகளின் அரசாட்சி தமிழகத்தில் இன்றைக்கு நடைபெறுவதை பார்த்து அண்டை மாநிலங்கள் சிரிப்பாய் சிரிப்பதை நாம் என்னவென்று சொல்வது. நம் ஜீவாதார பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்க அக்கறை செலுத்துவாரா, மக்களுக்கு ஒண்ணுன்னா உங்க பிள்ளை விஜய் கேள்வி கேட்பார் என்று சொன்னார் ,இப்போது எங்கே போனார் முதல்வர் விஜய்யை, தேடி கண்டுபிடித்து தருபவருக்கு பம்பர் பரிசு அறிவிக்க வேண்டுமா என தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.
இதையும் படிங்க: "பாப்கார்ன் சாப்பிட மட்டும் வாய் திறக்கிறாரே?”... புஸ்ஸி ஆனந்தை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!