நாமக்கல் மாவட்ட அஇஅதிமுக அண்ணா தொழிற்சங்கபேரவை சார்பாக மே தின விழா பொதுக்கூட்டம் திருச்செங்கோடு தேரடி அருகே நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி தொழிலாளர் விரோத ஆட்சி என்பதை எடுத்துக் கூறுகிற வகையில் சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை திட்டத்தை சட்டமுன் முடிவை தாக்கல் செய்தார்கள். எடப்பாடியார் மாபெரும் போராட்டத்தை அறிவித்தவுடன் தான் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இன்னும் பத்து மாத காலத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதில் மாபெரும் வெற்றியை பெறுவோம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிற வகையில் வந்திருக்கிற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் இருண்ட ஆட்சியாக திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எந்த பிரிவு மக்களுக்காவது இந்த ஆட்சி பலனளிக்கிறதா என்றால் இல்லை. இந்தப் பகுதி விசைத்தறி மிகுந்த பகுதி. விசைத்தறி தொழில் நலிந்து வருகிறது. எடைக்கு போடும் நிலை உருவாகி வருகிறது.

ஆயிரம் ரூபாய் திட்டம் இலவச பஸ் ஆகிய திட்டங்களை கொடுத்து விட்டோம் மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்று நம்புகிறார்கள். இலவச வேட்டி சேலை, விசைத்தறி பாதிப்பு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு என்பதை குறித்து கவலைப்படாமல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். 2026ஆம் ஆண்டு எடப்பாடியார் முதலமைச்சரானால் தான் அனைத்து தொழிலும் வளர்ச்சி அடையும். இனியும் இந்த அரசை நம்பி வாக்குறுதியை நம்பி வாக்களிக்க கூடாது. வருடத்திற்கு ஆறு சதவீதம் மின்கட்டணம் உயர்ந்து கொண்டிருக்கிறது வீட்டு வரி உயர்ந்து கொண்டிருக்கிறது சொத்து வரிஎன அனைத்தையும் உயர்த்தி விட்டார்கள்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மூன்று மாதம் சம்பளம் கொடுக்க வில்லை. சட்டமன்றத்தில் கேட்டால் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். மத்திய அரசு லேட் ஆகத்தான் கொடுக்கும் மாநில அரசு தனது சொந்த நிதியிலிருந்து சம்பளத்தை கொடுக்கும். ஆனால் அதை செய்யாத அரசு திமுக அரசு. தற்போது சாராயக்கடையை கொண்டு வந்து ஏழைகளை குடிக்க வைத்த ஸ்டாலின் அரசு, கஞ்சாவை கொண்டு வந்து இளைஞர்களை கெடுக்கும் அரசாக இருக்கிறது.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு முஸ்லீம்கள் ஓட்டு போடமாட்டாங்க... காரணம் சொல்லும் அப்துல் ஜாபர்..!
கட்சி ஊழியர் கூட்டத்தில் தண்ணி பாட்டிலுக்கு பதிலாக பீர் பாட்டில் வைக்கிற கட்சி திமுக. இவர்கள் ஆட்சியில் எப்படி சாராயத்தை ஒழிக்க போகிறார்கள் எனக்கு தெரியவில்லை. மக்களுக்கு பாதுகாப்பான ஆட்சி வேண்டும் என்று சொன்னால் எடப்பாடி ஆட்சிக்கு வந்தால் தான் நடைபெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அமைச்சர் ராஜினாமா செய்திருக்கிறார் தரக்குறைவாக பேசியதற்காக ராஜினாமா செய்திருக்கிறார். நாங்கள் போராட்டம் நடத்திய பிறகு தான் ராஜினாமா செய்திருக்கிறார்.
பெண்களைப் பற்றி மதத்தைப் பற்றி தரக்குறைவாக பேசுகிறார். அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். 2026 தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தால் தான் அவர்கள் மமதையை ஒழிக்க முடியும். மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் வர வேண்டும் என்று சொன்னால் எடப்பாடி ஆட்சிக்கு வர வேண்டும். மூணு லட்சம் கோடி தான் தமிழகத்தில் கடன் இருந்தது. தற்போது திட்டமும் செய்யாமல் 10 லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறார்கள் என விமர்சித்தார்.
இதையும் படிங்க: 93 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி அடித்த சிக்ஸர்.. துள்ளிக் குதிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!!