ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மலைப்பகுதி அரேப்பாளையத்தில் மே 1 தொழிலாளர் தினத்திற்கான அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மாநில சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ஜபார் பேசிய பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசும் பொழுது, வருகின்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைக்க வேண்டும் என கூறினோம். ஆனால் நம்முடைய கூட்டணிக்கு முஸ்லிம்கள் ஓட்டு போட மாட்டார்கள். முஸ்லிம்கள் அண்ணா திமுகவிற்கு ஓட்டு போட மாட்டார்கள். நான் ஜமாத்தின் உடைய தலைவர். என் கண்ணால் பார்த்திருக்கின்றேன். 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணியில் இல்லை. ஒரு சின்ன முஸ்லிம் கட்சியோடு கூட்டணி வைத்திருந்தாலும் முஸ்லிம்கள் திமுகவிற்கு வாக்களித்தனர்.
இதையும் படிங்க: 93 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி அடித்த சிக்ஸர்.. துள்ளிக் குதிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!!

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் பேசும் போது 2026 இல் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்து போட்டியிடுகின்ற நமக்கு 200 இடங்கள் நிச்சயமாக கிடைக்கும் என்னை பொருத்தவரை சாதாரண தொண்டனாக இருந்து பணியாற்ற தயாராக இருக்கின்றேன் என பேசினார்.
இதையும் படிங்க: திடீரென கட்ஆன கரண்ட்... அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் வீட்டில் நடந்த பகீர் சம்பவம்!