முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாடு சம்பிரதாய மாநாடா இருக்குமா? சாதனை படைக்கும் மாநாடாக இருக்குமா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பரபரப்பான சூழ்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் , துறையின் செயலாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் இரண்டு நாள் மாநாடு நடைபெறுவதாக ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வெளிவந்திருக்கிறது.
இதனுடைய நோக்கம் என்ன ஒரு நாட்டின் வளர்ச்சியை திட்டமிட வேண்டும் என்றால் முதலில் அந்த நாட்டின் உண்மை நிலையை அந்த நாட்டினுடைய ஆட்சியாளர்கள் அறிந்திருக்க வேண்டும் அந்த உண்மைகளை அறிவியல் முறையிலே அளவிட்டு புரிந்து கொண்டு இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!
குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறாத நாளே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை தொடர்கிறது இந்த மாநாட்டில் பாலியல் சம்பவங்களுக்கு தீர்வு காண இந்த த.வெ.க அரசு முயலுமா ! இதை ஏதோ அரசியல் விமர்சனமாக சொல்லவில்லை.
நேற்று கூட ராமநாதபுரத்தில் தாயுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி மாயமான பின் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது, இது முதல்வருக்கு அறிந்திருக்க வாய்ப்பு உண்டு .
காலையிலேயே அனுப்பப்படும் கோப்புகளுக்கு மாலைக்குள் முதல்வர் விஜய் கையெழுத்து இடுகிறார் என்கிற செய்தியும் வெளிவந்திருக்கிறது ஆகவே இந்த மாநாட்டில் தீர்வு ஏற்படுமா என்று மக்கள் எதிர்பார்ப்பு உள்ளது.
நேற்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்ற கும்பல் துப்பாக்கி உட்பட ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். போதைப்பொருள் நடமாட்டத்தை தமிழகத்தில் கட்டுப்படுத்த தீர்வு காண இந்த மாநாட்டில் நடவடிக்கை எடுக்கப்படுமா?
நாங்கள் வைக்கும் கோரிக்கை எல்லாம் விஜய் தலைமையிலான த.வெ.க அரசுக்கு வலிமை சேர்ப்பதற்காக தானே தவிர, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான தவிர, இதில் அரசியல் காழ்புணர்ச்சியோ, அரசியல் உள் நோக்கமோ எள்முனைஅளவும் இல்லை. விமர்சனங்கள்,
விமர்சனங்களையும், நோக்கத்தை நம்புங்கப்பா ,ஆக்சன் எடுங்கப்பா என்று தான் நாங்கள் சொல்லுகிறோம்.
கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியிலே கத்தி,கத்தி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் முன்வைத்த அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தீர்வு காணப்படவில்லை.
தற்போது மக்கள் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் த.வெ.க பக்கமா, அதிமுக பக்கமா, இல்லை பிற கட்சிகளின் பக்கமா என்று தெரியவில்லை. ஆனால் த.வெ.க
35 சதவீதம் ஆதரவை பெற்று நீங்கள் முதலமைச்சராக அமர்ந்து உள்ளீர்கள்.
இந்த விமர்சனங்களை உள்வாங்கி புரிந்து கொண்டால் தமிழகத்திற்கு விடிவு பிறக்கும் இல்லையே விடிவு பிறக்கின்ற வரை பொறுத்து இருப்போம் .காலம் கனியட்டும் நம் கவலைகள் யாவும் மறையட்டும் என்பதுதான் இந்த விமர்சனத்தின் நோக்கமே தவிர விமர்சனங்கள் வைப்பது விளம்பரத்திற்காக அல்ல
நாங்கள் தொடர்ந்து கடந்த கால ஆட்சியிலே விமர்சனங்களை கத்தி கத்தி சட்டமன்றத்தில் மக்கள் மன்றத்திலும் நாங்கள் சொன்னபோது கூட எங்களை மக்கள் முழுமையாக ஆதரிக்கவில்லை என்றாலும் மக்கள் தீர்ப்பு மகேஷசன் என்று தீர்ப்பு என்று தலைவணங்கி ஏற்றுக்கொண்டு, ஆட்சியிலே இருந்தாலும், ஆட்சியிலே இல்லை விட்டாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் சேவையிலே முதன்மையான இயக்கமாக எடப்பாடியாரின் தலைமையிலே களம் கண்டு கொண்டே இருக்கும். இந்த இரண்டு நாள் மாநாட்டில் முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்
இதையும் படிங்க: மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால் கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!