2025-26ம் ஆண்டு பொதுபட்ஜெட் அறிவிப்பில் பேசிய மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், “ காப்பீடு துறையில் தற்போது 74% அந்நிய முதலீ்ட்டுக்கு அனுமதியளிக்கப்படுகிறது, இது 100 சதவீதமாக உயர்த்தப்படும்” எனத் தெரிவித்தார். சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ்தளத்தில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது, காப்பீடு துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது உலகில் உள்ள மிகப்பெரிய காப்பீடு நிறுவனங்கள் நுழையவும், வெளிநாட்டு முதலீடு வரவும் வழி ஏற்படுத்தும். ஆனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏதேனும் ஏற்ற தாழ்வுகள், மனக்கசப்புகள் ஏற்பட்டால், வெளிநாட்டு நிறுவனங்களின் நம்பகத்தன்மைக்கும், உறுதி செய்வது சவாலாக இருக்கும், பாலிசிதாரர்களுக்கும் யார் பொறுப்பேற்பது, இந்த உறுதியில்லாத் தன்மை இருக்கும்போது யார் பாலிசி எடுப்பார்கள்.

இந்த புதிய முறை என்பது, வெளிநாட்டு நிறுவனங்களுக்குத்தான் முழுமையாக பாதுகாப்பு அளிக்கின்றன, ஆனால், இந்திய பாலிசிதாரர்களின் நலன்கள் உறுதியில்லாமல் இருக்கிறது. இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் மறுமுதலீடு செய்து, ப்ரீமியம் தொகையை நாட்டுக்குள்ளே வசூல் செய்தால்கூட, லாபத்தில் பாதியளவை இந்தியாவில் முதலீடு செய்வார்களா அல்லது தங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்வார்களா என்ற கேள்வி எழுகிறது. வெளிநாடு காப்பீடு நிறுவனங்களின் விதிகள், நிபந்தனைகளை உறுதி செய்ய வேண்டும், எழுத்துபூர்வமாக ஆவணம் செய்ய வேண்டும், அதைத் தெளிவாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற பாலிசிகளுக்கு மக்கள் வேகமாக படையெடுப்பது சரியானதுஅல்ல.
இதையும் படிங்க: புதிய வருமானவரி மசோதாவில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் சேர்ப்பு..!

அரசியல் நிதியுதவி பெறுவதற்காக மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்த வெளிநாட்டு காப்பீடு நிறுவனங்களை பயன்படுத்தலாம், ப்ரீமியம் தொகையை அதிகப்படுத்த அனுமதித்து, சாமானிய மக்களுக்கு சுமையை ஏற்படுத்தலாம். பாஜக உண்மையில் மக்கள் மீது அக்கறை கொண்டதாக இருந்தால், காப்பீடு ப்ரீமியங்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை நீக்க வேண்டும். பொதுசுகாதாரத்தை வலிமைப்படுத்தி, மக்களின் மருத்துவச் செலவுகளை குறைப்பதுதான் ஓர் அரசின் முதன்மைாயன பொறுப்பு. சுகாதாரம் மற்றும் காப்பீடு துறைக்கு வரிவிதிப்பது அத்தியாவசியம் அல்ல. மத்திய அ ரசு தனது கடமையிலிருந்து விலகியதற்கான செலவை மக்கள் சுமக்கக்கூடாது. பாஜக மக்களை வாடிக்கையாளர்கள் போல் கருதுகிறது. அந்தக் கட்சியின் மனநிலை வர்த்தக நோக்குடன், மக்கள் நலனைவிட லாபத்தில்தான் அதிகமான கவனத்தைச் செலுத்துகிறது
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏய்... நிறுத்துங்க..! திருச்சி சிவா, வில்சனை கதறவிட்ட நிர்மலா சீதாராமன்