தமிழகமே திருப்பரம்குன்றம் விவகாரத்தில் சூடாகி போயிருந்த நேரத்தில் திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து விட்டு திரும்பி இருக்கிறார் பாஜக மாநில முன்னாள் தலைவரான அண்ணாமலை . டெல்லியிலிருந்து அவசர அழைப்பு வந்திருக்கிறது. அமித்ஷாவின் வீட்டில் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரிந்தவுடன் தன் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை. அதனால்தான் திருப்பரம்குன்றம் போராட்டத்தில் அவர் கலந்து கொள்ள முடியாமல் போனது. அமித் ஷாவின் வீட்டிற்கு கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரும் அந்த ஆலோசனை கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
கட்சியும் கூட்டணியும் எப்படி இருக்கிறது என்று முதலில் அமித் ஷா அண்ணாமலையிடம் கேட்டிருக்கிறார். அமைப்பு ரீதியாக நாம் வலுப்பெற்று வருகிறோம். ஆனால் தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு இன்னும் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். மேலும் 62 சட்டமன்ற தொகுதிகளில் நாம் வலுவாக இருக்கிறோம். இப்போது இருக்கும் கூட்டணியை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்தால் எதிர்பார்த்த ரிசல்ட் வராது. தேமுதிக, பாமக, அமமுக போன்ற கட்சிகளையும் நாம் கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.
மேலும் அமித்ஷா டிசம்பர் 14 ஆம் தேதி வாக்கில் சென்னை வரவிருக்கிறேன். அப்போது தமிழகத்தில் உள்ள சிறு சமுதாய தலைவர்களையும் இயக்கங்களின் பிரதிநிதிகளையும் சந்திக்க திட்டமிட்டுருக்கிறேன். அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையை பாருங்கள் என நயினாரை மாநில தலைவராக நியமித்ததற்கு காரணம் இருக்கிறது. உங்களுக்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறக்கிறார். திருப்பரம்குன்றம் விவகாரம் குறித்தும், திமுக ஆட்சி குறித்தும் பேச்சு திரும்பி இருக்கிறது.
இதையும் படிங்க: “சங்கிகளின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது” - எடப்பாடி, அமித் ஷா பற்றி ஏடாகூடமாக வார்த்தையை விட்ட உதயநிதி ஸ்டாலின்...!
திமுகாவில் உள்ள சிட்டிங் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதெல்லாம் ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவர்களை தேர்தலுக்குள் டைப் செய்ய வேண்டும். மக்களும் திமுக அமைச்சர்கள் மீது அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் எதுவுமே சரியில்லை என பல அமைச்சர்கள் குறித்து லிஸ்ட் போட்டு கொடுத்திருக்கிறார். திருப்பரம்குன்றம் விவகாரத்திலேயே கூட நீதிமன்றங்களுடன் திமுக மோதி கொண்டிருக்கிறது. மேலும் மதுரை கமிஷனர் குறித்தும் மாவட்ட ஆட்சியர், துணை ஆணையர் இனிகோ திவ்யன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக அதிக அளவில் பேட்டிகளை கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்தே அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
இன்னும் இரண்டு வாரங்களில் பாஜாகா தேசிய தலைவருக்கான தேர்தலை நடத்திட திட்டமிட்டுருக்கிறதாம் டெல்லி. புதிய தலைவர் தேர்வான பிறகு தேசிய அளவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறது. இனி தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும் என்கிறார்கள் தமிழக அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: போடு ரகிட.. ரகிட..!! - தமிழ்நாட்டை தட்டி தூக்குறோம்... அண்ணாமலைக்கு அமித் ஷா கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!