கோவை விமான நிலையத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வடகிழக்கு பருவமழை துவங்கி இருக்கிறது, ஒரு புறம் டெல்டா மாவட்டங்களில் அறுவடையான நெல் முளைக்க துவங்கி இருக்கின்றது, மறு புறம் பயிரிடப்பட்ட சம்பா பயிர் மழையில் முழ்கி நாசமாகி விட்டது எனவும் தெரிவித்தார். இது திமுக அரசின் மெத்தனபோக்க எனவும், ஏரி ,குளம் போன்றவற்றை தூர்வாரி நீர் வெளியேற வழி வகை செய்ய வில்லை எனவும் தெரிவித்தார் . மழையால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சை உட்பட 4 முக்கிய மாவட்டங்களில் கொள்முதல் செய்த நெல் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
6.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், அதில் 18 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து இருக்க வேண்டும், ஆனால் 5.5 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்து இருக்கின்றனர் என தெரிவித்தார். நெல் ஈரப்பதம் அதிகமானதால் வாங்க மறுக்கின்றனர் என தெரிவித்த அவர், இது திமுக அரசின் தோல்வி எனவும், வெறும் விளம்பரத்தை மட்டுமே இந்த அரசு செய்கின்றது எனவும் குற்றம்சாட்டினார். விவசாயிகள் மீது அக்கறை இல்லாத அரசு இது எனவும். இந்த திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்தார்.
கொங்கு மண்டலத்தில் அத்திகடவு - அவினாசி திட்டம் தோல்வி அடைந்து இருக்கிறது, இந்த திட்டத்தில் 20 சதவீத ஏரிகள் மட்டுமே பயன் அடைகின்றது எனவும்,
இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த 4.5 ஆண்டு காலத்தில் புதிய திட்டங்கள், இருக்கும் காலத்தில் திட்டங்க ள் கொண்டு வர வில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட போதே எனக்கு உடன்பாடு இல்லை. 3500 கோடி ரூபாயில் கொண்டு வந்து இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.அதன் பின்பு ஆட்சிக்கு வந்த திமுகவிற்கு நீர்மேலாண்மை பற்றி திமுக அரசுக்கு எதுவும் தெரியவில்லை, 4.5 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: பாமகவின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி... ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
அத்திகடவு அவினாசி திட்டம் தோல்வி என்றால், அதை கொண்டு வந்த எடப்பாடி பழனிச்சாமியை குற்றம் சாட்டுகின்றீர்களா என்ற கேள்விக்கு, அதிமுக, திமுக என இரு கட்சிகளையும் சேர்த்து சொல்கின்றேன் என அன்புமணி பதில் அளித்தார். டாக்டர்.ராமதாஸ் குறித்த கேள்விகளுக்கு, இது எங்கள் உட்கட்சி விவகாரம். அது குறித்து பேச முடியாது என பதில் அளித்தார். ராமதாஸ் வீட்டில் கருவி வைத்து ஒட்டு கேட்டீர்களா என்ற கேள்விக்கு , இது எங்கள் உட்கட்சி விவகாரம் , அது குறித்து பேச முடியாது எனவும் அன்புமணி பதில் அளித்தார். பா.ம.க இரு அணிகளாக பிரிந்து இருப்பதில் ஏதாவது மாஸ்டர் பிளான் இருக்கின்றதா என்ற கேள்விக்கு,கையெடுத்து கும்பிட்டு விட்டு அன்புமணி ராமதாஸ் கிளம்பி சென்றார்.
இதையும் படிங்க: டிக்.. டிக்... அன்புமணி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பாண்டி பஜார் போலீஸ் தீவிர விசாரணை...!