பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணத்தை தொடங்கியுள்ளார். 10-கொள்கைகளை வலியுறுத்தி திருப்போரூர் முருகன் கோவிலில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து சாலையில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து திருப்போரூர் ரவுண்டானா பகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அன்புமணி வரும் வழி எங்கும் பேனர்கள் பாமக கொடிகள் வைக்கப்பட்டுள்ளன .
நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் நடை பயணத்தில் கட்சி கொடி மற்றும் தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என கூறியிருந்தார். நடைபயணம் மேற்கொண்டால் வட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் என டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING உரிமை மீட்பு பயணத்திற்கு சிக்கல்... அன்புமணிக்கு ராமதாஸ் வைத்த செக் - அதிரும் அரசியல் களம்...!

இந்நிலையில் திருப்போரூரில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களிலும் "ராமதாஸ்" என்கிற பெயர் இடம் பெறவில்லை. மாறாக அன்புமணியின் நடை பயணம் என்கிற இலட்சினை பேனர்களில் போடப்பட்டு உள்ளது.
கட்சியின் கொடியை பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் நேற்று தெரிவித்திருந்த நிலையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு வழி நெடுகிலும் கட்சி கொடி நடப்பட்டுள்ளது.
மேலும், பேனர்களில் பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. அன்புமணி, ராமதாஸ், சௌமியா அன்புமணி மற்றும் கட்சி நிர்வாகிகளின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒட்டு கேட்கும் கருவியில் லைகா சிம்... ஜி.கே. மணி பக்கம் ரூட்டை மாற்றும் ராமதாஸ்? - பகீர் கிளப்பும் புகார்...!