பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே வெடித்துள்ள மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அன்புமணிக்கு ஆதரவாக இருக்கும் நிர்வாகிகளை பதவியை விட்டு தூக்குவது, அடுத்தடுத்து குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது என ராமதாஸ் பரபரப்புகளை கிளப்பி வருகிறார். இதனிடையே, தற்போது அன்புமணியின் சுற்றுப்பயணத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் ராமதாஸ் செய்துள்ள காரியம் பாமகவினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் வரும் 25ம் நாள் தொடங்கி தமிழகம் முழுவதும் 100 நாள்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
பசுமைத் தாயகம் நாளாக கொண்டாடப்படும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளான ஜூலை 25ம் நாள் மாலை சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து தமிழ்நாடு நாளான நவம்பர் 1ம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
இதனிடையே, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தமிழக டிஜிபிடம் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அந்த மனுவில் தன்னுடைய மகன் நாளை முதல் தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்காக தன்னுடைய கட்சிக்கொடியை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் தன்னுடைய அனுமதி இல்லாமல் பாமக கொடியை பயன்படுத்த கூடாது என தமிழக டிஜிபிடம் மனு ஒன்றை அளித்திருக்கிறார். மேலும் இந்த மனுவில் உரிமை மீட்பு பயணத்தில் தனது மகனான அன்புமணி பங்கேற்கக்கூடாது என்ற கோரிக்கையையும் ராமதாஸ் வைத்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
இதையும் படிங்க: ஒட்டு கேட்கும் கருவியில் லைகா சிம்... ஜி.கே. மணி பக்கம் ரூட்டை மாற்றும் ராமதாஸ்? - பகீர் கிளப்பும் புகார்...!
இதையும் படிங்க: அப்பா இல்லாத நேரத்தில் திடீர் விசிட்... அம்மாவின் கைகளைப் பிடித்து கண் கலங்கிய அன்புமணி... தைலாபுரத்தில் நடந்தது என்ன?