• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாடே திணறிக்கிட்டு இருக்கும் போது இது தேவையா விஜய்?... தவெக அரசை எச்சரித்த அன்புமணி...!

    நாடே எரிபொருள் தட்டுப்பாட்டால் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் 300 பேருந்துகளை வீணாக பல நூறு கி.மீ தொலைவுக்கு இயக்குவது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயலாகும்.
    Author By Amaravathi Wed, 24 Jun 2026 10:48:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    anbumanis-condemnation-to-300-buses

    முதலமைச்சர் விஜயின் 52வது பிறந்தநாளை ஒட்டி புதிய பேருந்துகள் சேவை தொடக்க விழாவுக்காக 300 பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்து மனிதவளம், எரிபொருள் வீணடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் சோசியல் மீடியா பதிவில், தொடக்க விழாவுக்காக 300 பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்து காத்திருக்க வைப்பதா? மனிதவளம், எரிபொருளை வீணடித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை! தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்கவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை கொண்டு வரப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

    இந்தியா கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் தேவையின்றி பேருந்துகளை இயக்கி எரிபொருளை வீணாக்குவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. மாநகரப் போக்குவரத்துக்கழகம், விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் உள்ளன. மீதமுள்ள 6 போக்குவரத்துக் கழகங்கள் 24 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்ட 300 பேருந்துகளின் தொடக்கவிழா கடந்த 22-ஆம் தேதி முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும் புதிய பேருந்துகளை சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் உயரதிகாரிகளுக்கு வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    அதன்படி, புதிதாக தொடங்கி வைக்கப்படவுள்ள 300 பேருந்துகளில் மாநகர மற்றும் விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தவிர மீதமுள்ள அனைத்தும் நாகர்கோயில், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 24 நகரங்களில் இருந்து கடந்த 22-ஆம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், 22-ஆம் தேதியும், 23-ஆம் தேதியும் தொடக்க விழா நடத்தப்படாத நிலையில், 300 புதிய பேருந்துகளும் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு பேருந்துக்கும் இரு ஓட்டுனர்கள், ஒரு நடத்துனர் வீதம் மொத்தம் 900 ஊழியர்களும் சென்னைக்கு வந்துள்ளனர். புதிய பேருந்துகளின் இயக்கம் எப்போது தொடங்கி வைக்கப்படும் என்பது தெரியவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தங்குவதற்கு இடமும், உணவும் இல்லாமல் கடந்த இரு நாள்களாக தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் குழப்பமும், தொழிலாளர்களின் அவதியும் இன்னும் எத்தனை நாள்களுக்கு தொடரும் என்று தெரியவில்லை.

    ஒரு பேருந்தை ஒரு முறை சென்னைக்கு எடுத்து வந்து மீண்டும் எடுத்துச் செல்வதற்கு குறைந்தது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், அதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பு இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும். ஏற்கனவே போக்குவரத்துக் கழகங்கள் கடும் இழப்பில் இயங்கி வரும் நிலையில், இது போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் சுமையையே ஏற்படுத்தும்.

    நாடே எரிபொருள் தட்டுப்பாட்டால் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் 300 பேருந்துகளை வீணாக பல நூறு கி.மீ தொலைவுக்கு இயக்குவது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயலாகும். கடந்த காலங்களில் புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்படும் போது சில மண்டலங்களில் இருந்து மட்டும் பெயரளவுக்கு வரவழைத்து விழாவை நடத்துவது தான் வழக்கம். இப்போது 300 பேருந்துகளை தேவையின்றி சென்னைக்கு வரவழைத்திருக்கக் கூடாது. இவை அனைத்தும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு தெரிந்து நடக்கிறதா? இல்லை அவருக்கு தெரியாமல் நடக்கிறதா? என்பது தெரியவில்லை. தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பேருந்துகள் அனைத்தையும் உடனடியாக திரும்பிச் செல்ல ஆணையிட வேண்டும். புதிய பேருந்துகளை தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வர அறிவுறுத்திய அதிகாரிகள் யாராக இருந்தால் அவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியை பார்த்ததும் சட்டென CM விஜய் செயல்..! பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில் நடந்த சம்பவம்..!!

    மேலும் படிங்க
    கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

    கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

    அரசியல்
    ஒருவழியாக சேர்ந்த குடும்பம்..! "ராமதாசை சந்தித்த அன்புமணி... தந்தையின் திருமண நாள் கொண்டாட்டம்..!!

    ஒருவழியாக சேர்ந்த குடும்பம்..! "ராமதாசை சந்தித்த அன்புமணி... தந்தையின் திருமண நாள் கொண்டாட்டம்..!!

    தமிழ்நாடு
    திமுகவை பலப்படுத்த போராடும் உதயநிதி ஸ்டாலின்! முட்டுக்கட்டை போட்டு குடைச்சல் கொடுக்கும் சீனியர்கள்!

    திமுகவை பலப்படுத்த போராடும் உதயநிதி ஸ்டாலின்! முட்டுக்கட்டை போட்டு குடைச்சல் கொடுக்கும் சீனியர்கள்!

    அரசியல்
    தொட்டவங்களை விட மாட்டோம்! சொன்னதை செய்த முதல்வர் விஜய்! நேருக்கு நேரடி சிக்கல்!

    தொட்டவங்களை விட மாட்டோம்! சொன்னதை செய்த முதல்வர் விஜய்! நேருக்கு நேரடி சிக்கல்!

    அரசியல்
    கண்ணதாசன் படைப்புகள் "பொக்கிஷங்கள்"..! முதல்வர் விஜய் புகழாரம்..!

    கண்ணதாசன் படைப்புகள் "பொக்கிஷங்கள்"..! முதல்வர் விஜய் புகழாரம்..!

    தமிழ்நாடு
    நான் பேசுனா.. ஒன்னு எனக்கு பிராப்ளம் வரும், இல்ல மற்றவர்களுக்கு பிராப்ளம் வரும்..!! தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு..!

    நான் பேசுனா.. ஒன்னு எனக்கு பிராப்ளம் வரும், இல்ல மற்றவர்களுக்கு பிராப்ளம் வரும்..!! தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

    கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

    அரசியல்
    ஒருவழியாக சேர்ந்த குடும்பம்..!

    ஒருவழியாக சேர்ந்த குடும்பம்..! "ராமதாசை சந்தித்த அன்புமணி... தந்தையின் திருமண நாள் கொண்டாட்டம்..!!

    தமிழ்நாடு
    திமுகவை பலப்படுத்த போராடும் உதயநிதி ஸ்டாலின்! முட்டுக்கட்டை போட்டு குடைச்சல் கொடுக்கும் சீனியர்கள்!

    திமுகவை பலப்படுத்த போராடும் உதயநிதி ஸ்டாலின்! முட்டுக்கட்டை போட்டு குடைச்சல் கொடுக்கும் சீனியர்கள்!

    அரசியல்
    தொட்டவங்களை விட மாட்டோம்! சொன்னதை செய்த முதல்வர் விஜய்! நேருக்கு நேரடி சிக்கல்!

    தொட்டவங்களை விட மாட்டோம்! சொன்னதை செய்த முதல்வர் விஜய்! நேருக்கு நேரடி சிக்கல்!

    அரசியல்
    கண்ணதாசன் படைப்புகள்

    கண்ணதாசன் படைப்புகள் "பொக்கிஷங்கள்"..! முதல்வர் விஜய் புகழாரம்..!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே வெளியான முக்கிய அறிவிப்பு... சி.எம்.விஜய்க்கு புது சிக்கல்... தமிழகமே கொந்தளிப்பு...!

    விடிந்ததுமே வெளியான முக்கிய அறிவிப்பு... சி.எம்.விஜய்க்கு புது சிக்கல்... தமிழகமே கொந்தளிப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share