சென்னையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெல்லும் தமிழ் பெண்கள் என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டத்தை விடுபட்ட மகளிர்காக தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியை காணொளி காட்சி வழியாக பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார், சபாநாயகர் அப்பாவு பங்கேற்றனர்.
சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது., கலைஞர் உரிமைத்தொகை மாதம் தோறும் தமிழக முதல்வர் வழங்கி வருகிறார். இந்த திட்டம் ஒரு கோடி மேல் பேருக்கு செயல்படுக்கப்பட்டு வந்தது. அதில் விடுபட்டவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று தமிழக முழுவதும் 11 லட்சத்து 66 ஆயிரம் மேலானவர்களுக்கு இன்று முதல் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கொடுத்தவர்களுக்கும் இன்று முதல் கொடுத்தவர்களுக்கும் ஆயிரம் மாதம்தோறும் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஆயிரம் ரூபாய் உயரும் என்ற வார்த்தையும் முதல்வர் கூறி இருக்கிறார்.
நெல்லை மாவட்டத்தில் மட்டும் 44 ஆயிரத்திற்கும் மேலானவர்களுக்கு ஆயிரம் உதவித்தொகை வழங்கி உதவி செய்திருக்கிறார் முதல்வர் அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் சாசனம் அதில் ஒன்றிய அரசு தலையிடாது என அமித்ஷா கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, அவர் சொல்வது உண்மைதான் ஏனென்றால் ஒன்றிய அரசின் அங்கமாகவே தேர்தல் ஆணையம் மாறிவிட்டது. ஏற்கனவே உச்ச நீதிமன்ற தலைமை நீதி அரசர், பிரதமர், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மூன்று பேரும் சேர்ந்து இந்திய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் வரை எல்லா சட்டதிட்டத்திற்கும் உட்பட்டு செயல்பட்டது.
இதையும் படிங்க: எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டில் குஸ்கா தான்" - கோவையில் போஸ்டர் ஒட்டி திமுகவினர் கொக்கரிப்பு...!
இந்திய தேர்தல் ஆணையம் என்பது மட்டும் இல்லாமல் ஒரு வார்த்தையையும் கூறியுள்ளார்கள். இந்திய தேர்தல் ஆணையம் என்ன செய்தாலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட மாட்டாது. இப்படி சொல்லி இருக்கிறார் என்றால் தேர்தலே தேவையில்லை. எல்லா ஈவிஎம் எந்திரங்களிலும் எவ்வளவு ஓட்டுகள் போட வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் இப்பொழுது evm மூலம் தேவையில்லை வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என பலரும் பேசி வருகிறார்கள்.
திமுகவை துடைத்து எறிவோம் என அமித்ஷா கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, தமிழகத்தில் 2026 தேர்தலில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஆவார். இதை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்று கூறினார்.
இதையும் படிங்க: ஒரே அறையில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி... 88 நிமிட காரசார விவாதம்... நடந்தது என்ன?