கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழாவில் பங்கேற்ற தமிழக சட்ட பேரவை சபாநாயகர் அப்பாவு, அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் முப்பது லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என கூறிய திமுக மூன்று லட்சம் வேலை வாய்பையே உருவாக்கியுள்ளது என்ற அன்புமணி குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சிறு குறு நடுத்தர தொழில்கள் மொத்தம் 15 லட்சத்து 40 ஆயிரம் கோடியிலிருந்து தற்போது புதிதாக 17 லட்சத்து 10 ஆயிரம் சிறு குறு நடுத்தர தொழில்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மானியம்,மின் இணைப்பு உட்பட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்தி உள்ளது.
இந்தியாவில் சிறு குறு நடுத்தர தொழிலில் 20 கோடி பேர் வேலை செய்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனத்தில் ஒரு கோடி பேர் வேலை செய்கிறார்கள். இந்த கார்பரேட் க்கு மத்திய அரசு துணை போகிறது. ஆனால் தமிழ்நாட்டில் சிறு குறு நடுத்தர தொழில் செய்பவர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்வதில்லை.ஆனால் தமிழ்நாட்டில் படித்து வேலைவாய்ப்பு இல்லை என்றால் நமது அரசு ஒன்றரை கோடி ரூபாய் வரை நமது அரசு மானியம் கொடுக்கிறது. இதனால் தான் சிறு குறு நடுத்தர தொழில் அதிகம் உருவாகியுள்ளது என்றார்.
பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, காமராஜர் குறித்து எந்த அவதூறு பரப்பினாலும் அவர்கள் முகவரி இல்லாமல் போவார்கள். காமராஜரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் விமர்சனம் செய்தாலும் அவர்களது மரியாதை போகும். முதல்வரை பற்றி எவ்வளவோ விமர்சனம் வருகிறது. ஆனால் வழக்கு பதிவு செய்ய முடியாது கருத்து சுதந்திரம் சட்டத்திற்குள் வராது. பெருந்தலைவர் காமராஜரை அவ்வாறு பேசி இருப்பது தவறு கண்டிக்கத்தக்கது என்றார்.
இதையும் படிங்க: “எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது” - அமித் ஷாவுக்கு நேரடியாக சவால் விட்ட அப்பாவு...!
எஸ்.ஐ.ஆர் கால நீட்டிப்பு குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் மொத்தம் ஆறு கோடியே நாற்பது லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். புதியதாக எஸ்.ஐ.ஆர் என்று தேர்தல் ஆணையம் கொண்டு வந்து உள்ளது அது திருத்தம் தான் அது பல சந்தர்பத்தில் நடக்கும் ஆனால் முன்பு வெளிப்படை தன்மையாகவே நடக்கும். முன்பு தேர்தல ஆணையரை உச்ச நீதிமன்ற நீதி அரசர், பாரத பிரதமர்,நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ஆகியோர் சேர்ந்து அதில் கூடுதல் யார் முதன்மை என்பதே பொறுத்தே தேர்தல் ஆணையரை தேர்வு செய்கின்றனர். ஆனால் தற்போது உச்ச நீதிமன்ற நீதி அரசருக்கு பதிலாக அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சரை நியமித்து ஒரு புதிய சட்ட திட்டத்தை கொண்டு வந்து உள்ளனர். இதன் மூலம் ஞானேஷ் குமார் என்பவர் தேர்தல் ஆணையராக உள்ளார் அவர்கள் என்ன செய்தாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, வழக்கும் பதிவு செய்ய முடியாது என்றார்.
மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் ஒவ்வொரு பூத்துக்கும் ஐம்பது ஐம்பது ஓட்டுகள் என்று தாமரைக்கு சாதகமாக வைத்திருந்தால் நாங்கள் என்ன செய்வோம் என்றும் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் முழுவதும் போலியானது. அதுவும் நமது பாரத பிரதமர் ஆட்சியில் எப்படி நம்பக தன்மை வரும் என்றும் கூறினார். நீதிமன்றம் திமுகவினரால் கேலி கூத்துக்குள்ளாகியுள்ளது என்ற அண்ணாமலை விமர்சனம் குறித்த கேள்விக்கு அது அவர் கருத்து என பதிலளித்தார்.
இதையும் படிங்க: RSS சித்தாந்தத்தில் ஒன்றுபட்ட விஜய்... சும்மா கண்துடைப்பு... சபாநாயகர் அப்பாவு விமர்சனம்...!