திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், திமுக அரசு மக்கள் மீது தொடர்ந்து வழக்குகள் போட்டு எழுச்சிகளை குறைக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறது. விநாயகர் ஊர்வலத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் ஊர்வலத்தில் அதிகபடியான கூட்டம் அதிகபடியான சிலைகள் எழுச்சிமிகு கூட்டத்தை பார்த்தவுடன் விநாயகர் ஊர்வலத்தை தடுக்க திமுக அரசு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறது அடுத்த ஆண்டு இதைவிட சிறப்பாக தான் இருக்கும் என்றார்.
டோல்கேட் உயர்வை பொறுத்த வரைக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வருடாந்திர பாஸ் கொண்டு வந்துள்ளார். அந்த வருடாந்திர பாஸ் பயன்படுத்துகின்ற பொழுது டோல்கேட் கட்டண உயர்வை விட அது எளிமையாக தான் இருக்கும். அதை மக்கள் பார்க்க வேண்டும். டோல்கேட் ஒரு சில இடங்களில் உயர்த்தப்படுகின்ற அந்த தொகை அதிகமாக இருக்கிறது என மக்கள் நினைத்தால், தயவு செய்து எங்கள் கட்சி தலைவர்கள் கவனத்திற்கு கொண்டு வாருங்கள் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
டிடிவி தினகரன் மிகவும் முக்கியமான தலைவர். ஆற்றல் மிகுந்த தலைவர். அவருக்கென ஒரு பெரும் இளைஞர் படை உள்ளது. நல்ல அரசியல்வாதி, நெருங்கிய நண்பரும் கூட 2026 இல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்து வருகிறார். தேசிய கூட்டணிக்கு 2024 வரும்போது டிடிவி தினகரன் ஒரு சீட் கூட வேண்டாம் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஐயா அவர்களை பிரதமர் ஆக்குவது எங்களுடைய லட்சியம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இளைஞர்கள் எதிர்காலம் கிள்ளுக் கீரையா? TNPSC தேர்வுத்தாளில் கவனக்குறைவு... அண்ணாமலை கண்டனம்..!
தேசிய ஜனநாயக கூட்டணி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் 2024 ல் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் என்றார்.
இதையும் படிங்க: உங்க அரசியலுக்கு போலீஸ் அதிகாரிகள் பலிகடா! திமுகவை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை…