குடியரசுத் துணை தலைவர் திடீரென பதவியை ராஜினாமா செய்ததை பூதாகர பிரச்சனைகளை காங்கிரஸ் கட்சி கிளப்பி வருகிறது . இதனிடையே, காஞ்சிபுரத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கரின் அவர்கள் நாட்டிற்காக சிறப்பாக பணிபுரிந்து வந்தார், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மார்ச் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.உடல் ஆரோக்கியத்தை மையப்படுத்தி நேற்று இரவு ராஜினாமா செய்துள்ளார், அவர் உடல்நிலை சரியாகி குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டுமென பிரார்த்திக்கிறேன் என்றார்.
தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என தெளிவாக இருக்கின்றனர், அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஒவ்வொரு நாளும் திமுக கட்சி மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது, கூட்டணி கட்சி உடைவதற்கான அறிகுறிகள் தெரிகிறது,
இதையும் படிங்க: 1000 ரூபாய்க்காக மகளிரை வலுக்கட்டாயப்படுத்தும் திமுக... வெளுத்து வாங்கிய அண்ணாமலை...!
2026 தேர்தலில் திமுகவிற்கு வரலாற்றில் மிக மோசமான தேர்தல் ஆக இருக்கும், திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு, நாட்டின் வளர்ச்சியும் கோட்டை விட்டுவிட்டனர் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீருடையுடன் நடந்து சென்ற மயிலாடுதுறை டி.எஸ்.பி..! கொந்தளித்த அண்ணாமலை.. விளக்கமளித்த காவல்துறை..!