கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரைக்கும் அமைச்சராக பதவி வைத்த எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக 21 லட்ச ரூபாய் சொத்து சேர்த்ததாகவும், அதேபோல 2006 முதல் 2011 ஆம் ஆண்டு காலத்தில் அமைச்சராக பதவி வைத்த போது 3 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும் அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு வழக்குகளை பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் எம்.ஆர். கே பன்னீர்செல்வம், அவருடைய மனைவி, மகன் ஆகியோரை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருந்தார்கள். இந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்த கடலூர் நீதிமன்றம் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூன்று பேரையும் இரண்டு வழக்குகளில் இருந்தும் விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த இரண்டு உத்தரவையும் எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில உயர்நீதிமன்றத்தில மறுஆய்வு மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மறு ஆய்வு மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன் இன்றைக்கு இந்த வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறார். லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்த இரண்டு மறு ஆய்வு மனுக்களையும் ஏற்றுக்கொண்டு, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குடும்பத்தினரை இந்த சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்! தமிழக அரசு மீதும் ஆளுநர் பரபரப்பு புகார்...
மேலும் அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிராக இரண்டு வழக்குகளிலும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, ஆறு மாதங்களில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: மதிய உணவால் தப்பித்த கேரள குடும்பத்தினர்: பரபரப்பு தகவல்கள்..!