சமீபத்தில் தஞ்சையில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என வலியுறுத்தி கடிதம் வந்திருக்கிறது. தமிழக அரசு தரும் ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி அதிகமாகிறது. அதனால் நெல்லுக்கு வழங்கும் ஊக்கத்தொகை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனெ கடிதம். இப்படிகூட ஒருவரால் யோசிக்க முடியுமா? என நினைக்கும்படி கடிதம் இருந்தது என பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சோசியல் மீடியா பதிவில், மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே, "நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்" எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது. இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், ஊக்கத்தொகை வழங்குவது மாநிலங்களின் உரிமை அதனை ரத்து செய்ய கூறவில்லை எனக்கூறியிருந்தார்.
கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள். தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? எனக்குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!
இதையும் படிங்க: அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!