சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இருக்கக்கூடிய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பாக மூன்று நாட்கள் நடைபெற உள்ள விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை சார்ந்த நிறுவனங்களுக்கான AeroDefCon 25 என்ற இந்த மாநாட்டை தமிழ்நாட்டில முதல் முறையாக நாம் தொடங்கி வைத்துள்ளோம்.
இன்றைய தினம் இந்தியா முதலீடுகளை மட்டுமல்ல உலக முதலீடுகளை ஈர்க்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்திருக்கு. இப்படிப்பட்ட முன்னோடியான மாநாடுகளை நம்முடைய தொழில்துறை சார்பில் நடத்துவதுதான் இந்த மாநாடுகள் எல்லாம் உலகளவில் பேசப்படுது. அதுமட்டுமல்ல அனைத்து விதமான வளர்ந்து வரும் தொழில்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிற அடையாளம் தான் இந்த மாநாடு. இது வெறும் கண்காட்சி அல்ல, புதிய தொழில் நிறுவனங்கள் உற்பத்தியாளர்கள் ஆகியோரை கண்டறிந்து அவர்களையே கூட்டு முயற்சியிலே புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கான தளம் இந்த மாநாட்டை சிறப்பாக ஒருங்கிணைச்சிருக்கக்கூடிய தொழில்துறை அமைச்சர் தம்பி டிஆர் டிஆர்வி டி.ஆர் ராஜா அவர்களுக்கும் தொழில்துறை அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்களை வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாடு அனைத்து வகையான தொழில்களையும் தடம்பதிச்சு வரும். தமிழ்நாடு உற்பத்தி துறையில் லீடரா மாறிட்டு வருது ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த தானியாங்கி வாகனங்களில் தமிழ்நாட்டோட ஷேர் மட்டும் எவ்வளவு தெரியுமா 40 விழுக்காடு, அது மட்டுமா மூன்றுல ரெண்டு பங்கு இருசக்கர மின் வாகனங்கள் இங்கதான் உற்பத்தி செய்யப்படுகிறது. 2024-2025ஆம் ஆண்டில 14.6 6 பில்லியன் டாலர் மதிப்புடைய மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து அதிலும் நாம் தான் முதலிடம் என்பதை நிரூபித்துள்ளோம். 45000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளது. இந்தியாவிலே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மொத்த ஜிடிபில்உற்பத்தி துறை 20 விழுக்காடு பங்குகளை வகிக்கிறது. உலகளாவிய பொருளாதாரத்தில் தமிழ்நாடு முன்னணி 50 இடங்களில் இருக்கு, இந்தியாவிலேயே 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியோட டபுள் டிஜிட்ட எட்டிப்பிடித்திருக்கக்கூடிய ஒன் அண்ட் ஒன்லி மாநிலம் தமிழ்நாடுதான் எதை பண்ணாலும் ஆல்ரவுண்டா பெஸ்ட்டா பண்றதுனால தான் இது சாத்தியமாகியுள்ளது.
இதையும் படிங்க: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச முயற்சி.. முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்..!!
இந்திய விண்வெளி துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்ற உள்ளது. உயர்தர ஜெட் இந்தியன் பாகங்களில் இருந்து ட்ரோன்கள் உற்பத்தி வர நடக்க இருக்கு. கோவை வரப்பட்டியில 360 ஏக்கரில் பாதுகாப்பு தொழில்துறை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. விமானம் பழுது பார்த்தல், பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகள் முதல் நேரடி ஓடுதள அணுகு வசதியோடு கூடிய வான்வெளி பூங்கா 200 ஏக்கரில் சூலூரில் அமைக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்புத்துறையில் 23,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. சென்னை அருகே AEROHUB என்ற திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் முதலீடுகளுக்கு உகந்த பகுதிகளாக திகழ்கிறது என்றார்.
இதையும் படிங்க: நாளை ராமநாதபுரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. 2 நாட்களுக்கு இது 'NO'.. போலீஸ் ஸ்ட்ரிக்ட் உத்தரவு..!!