சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு மூன்று முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மக்களுக்கு என்ன தேவையோ, அதற்கே அமைச்சர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம், நண்பகல் 12.20 மணி வரை நடைபெற்றது. இதில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
ஏற்கெனவே, சமூக நீதி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும், நிர்வாகம் தொடர்பான முக்கியத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த விவகாரங்களைத் தவிர்த்து, அமைச்சர்களுக்கு மேலும் பல முக்கிய அறிவுறுத்தல்களை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!
மக்களுக்கு என்ன தேவையோ, அதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்றும், அதற்கான பணிகளை மேற்கொண்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மக்களின் தேவைகளை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்றும், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் அமைச்சர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களது செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வரின் புதுக்கோட்டை விசிட்..! அரசு நிகழ்ச்சிப் பணிகள் தீவிரம்..! எகிறும் எதிர்பார்ப்பு..!!