தூத்துக்குடி தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு என்ற ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தவறான முடிவு மன உளைச்சலுக்கு ஆளானதால் மாநில பொதுக்குழு உறுப்பினர் தூத்துக்குடி மாநகராட்சி காங்கிரஸ் கட்சி கொறடா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ்
தூத்துக்குடி மாநகராட்சி 34 வது வார்டு மாநகராட்சி உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் சந்திரபோஸ் இவர் காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி காங்கிரஸ் கட்சி கொறடாவாகவும் செயல்பட்டு வருகிறார்
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 எம்எல்ஏக்களுடன் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்தனர். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது திமுக இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது
இதையும் படிங்க: #BREAKING ரூட் கிளியர்... கெத்தாக ஆளுநர் மாளிகையில் விஜய்... பதவி பிரமாணம் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...!
இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் சந்திரபோஸ் தனது காங்கிரஸ் கட்சி பதவியான மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சி மாநகராட்சி கொறடா ஆகிய இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தைக்கு வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார் இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இது தொடர்பாக கவுன்சிலர் சந்திரபோஸ் கூறுகையில், நான் ஐந்து முறை தூத்துக்குடி மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சியில் கவுன்சிலராக இருந்து வருகிறேன் இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்து வெற்றிக்காக உழைத்தோம் ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்த தேர்தலில் கூட்டணி கட்சிக்காக முறையாக பிரச்சாரம் செய்யவில்லை திமுக தோற்க வேண்டும் என்ற நிலையிலேயே அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் தற்போது ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு என்ற நிலைப்பாடு யாரையும் கலந்து ஆலோசிக்காமலும் பொதுக்குழுவை கூட்டி கருத்தை கேட்காமல் எடுத்தது கண்டிக்கத்தக்கது இது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதால் தான் காங்கிரஸ் கட்சி பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்தார் தொடர்ந்து மக்களுக்கு பணியாற்ற இருப்பதாகவும் அவர் கூறினார்
தவெகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஏற்பட்ட உச்சக்கட்ட கருத்து வேறுபாட்டால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரு குழுக்களாக பிரிந்தனர். இன்று காலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், தற்போது சி.வி.சண்முகம் தலைமையில் தனியாக ஆலோசனை
இதையும் படிங்க: #BREAKING ரத்து செய்தார் ஆளுநர்... விஜய்-க்கு ‘நோ’ சொன்ன அர்லேகர்... திடீரென எடுத்த அதிரடி முடிவு...!