ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் பேசிய மார்கிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ.சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுமென அறிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆணவக்கொலைகள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறோம். மிகக் கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்து யார் தவறு செய்கிறார்களோ நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக அலுவலகத்துக்கும் எத்தனையோ காதலர்கள் வந்து தஞ்சம் புகுந்துள்ளனர். ஒன்றல்ல, ரெண்டல்ல தனிப்பட்ட முறையில் எனக்கே பலரைத் தெரியும். ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தில் நியாயம் கிடைக்கும் என நம்பி வருகின்றனர். நாம் சில இடங்களில் தந்தை, தாயை அழைத்து சொல்கிறோம். சில இடங்களில் பக்கத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டரைக் கூப்பிட்டு சொல்கிறோம். நீங்கள் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறோம் எனக்கூறினார். மேலும் ஒரு கட்சி அலுவலகம் என்பது எல்லோருக்கும், எல்லா சாதிக்கும், எல்லா மதத்துக்கும் பொதுவானது. நம்பி வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். பாஜக அலுவலகத்துக்கும் வாருங்கள், நாங்கள் நியாயமாக நடந்துகொண்டிருக்கிறோம்.
இந்நிலையில் இன்று விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, ஆணவக் கொலைகளைப் பற்றி அழுத்தமான கருத்துக்களை கூறாத முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை காதல் திருமணங்களை செய்து கொள்ள பாஜக அலுவலகத்திற்கு வரலாம் என தெரிவித்திருந்தது குறித்து கேள்விப்பட்டது. அதற்கு அண்ணாமலையின் அலுவலகம் எங்கு இருக்கிறது. கட்சியிலிருந்து அவருக்கு அலுவலகம் ஒதுக்கீடு செய்யவில்லை. முதலில் அண்ணாமலைக்கு அலுவலகம் கொடுக்கட்டும். அதன்பின் அலுவலகத்திற்கு வரச் சொல்லுவோம். ஆணவக் கொலைகளுக்கு ஆதரவான ஒரே கட்சி பாஜக. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் சிந்தனை என்பது ஆணவக் கொலைகளை அதிகரிக்க கூடியது. கொலை செய்பவர்களை காக்கின்ற அமைப்பாகவும் அவர்கள் இருக்கின்றார்கள்.
இதையும் படிங்க: ரொம்ப பெருமை பீத்திக்காதீங்க ஸ்டாலின்.. பேட்ச்வொர்க் மாடல் அரசு என கிண்டலடித்த அண்ணாமலை..!!
இதையும் படிங்க: தன் கையால் பதக்கம் வாங்க மறுத்த TRB ராஜாவின் மகன்... அண்ணாமலை சொன்ன சொல்..!