விருதுநகர் அருகே உள்ள தாதம்பட்டியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான சமுதாய கூடத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தகவல் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணி வரும் தேர்தலில் இல்லாமல் போகும். இது திமுக கூட்டணிக்கும் தவெக விற்கும் எதிரான தேர்தலாக மாறப்போகிறது. ஏனென்றால், பாஜகவுடன் கூட்டு சேர்ந்த எந்தக் கட்சியும் தமிழகத்தில் வெற்றி பெறாது. பாஜகவிற்கு எதிரான மனநிலை தமிழக மக்களிடம் உள்ளது. எனவே, மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மலரும் என தெரிவித்தார்.

விருதுநகர் அருகே உள்ள தாதம்பட்டியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான சமுதாய கூடத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தகவல் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
நேரடியாகவும், மறைமுகமாகவும், திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை. தனித்து போட்டியிடுவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு?
இதற்கு பாஜகவினர் தான் பதில் கூற வேண்டும்.
இதையும் படிங்க: தேர்தல் நிதிக்காக அம்பானிக்கு உதவியதா பாஜக?... காங்கிரஸ் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு...!

விஜய்யின் பேச்சு, அமித்ஷாவுக்கு தந்த பதில். திமுகவை 2026 இல் வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் சேர வேண்டுமென தவெக தலைவர் விஜய்யை, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அழைத்து வருகிறார்? இது பாஜகவின் பரிதாப நிலையை காட்டுகிறது. விஜய் கூறி விட்டார் பாஜகவுடன் கூட்டணி இல்லையென. அதன் பிறகும் ஏன்? கூட்டணிக்கு அழைக்கிறார்? தவெக மீது இனி ஈ.டி, ஐ.டி, சிபிஐ யை ஏவப் போகிறார்களா என பொருத்திருந்துபார்க்க வேண்டும்?.

நம்மைப் பொருத்தவரை எடப்பாடி பழனிசாமி எப்படி பாஜகவுடன் கூட்டணி வைத்தார் என்பது தெரியும். அவருடைய சம்பந்தி வீட்டில் ரெய்டு நடந்த 15 நாட்களில் டெல்லிக்கு விமானத்தை பிடித்து போய் கூட்டணி வைத்துக் கொண்டார். இது எல்லாவற்றிக்கும் தவெக தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தக் கூடியவர் அமித்ஷா. நாங்கள் அனைத்தையும் தாங்க தயாராக இருக்கிறோம் என்றார்.
இதையும் படிங்க: விஜய்யை கூட்டணிக்கு வாங்கன்னு கூப்பிடவே இல்லையே... கிண்டலடித்த அமைச்சர் கே.என்.நேரு!!