2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த சூழலில் திமுக-காங்கிரஸ் இடையேயான உறவில் சில பிளவுகள் தென்படுவதால், தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் மாற்று வழியை ஆராய்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் தகவல்கள் முதலில் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் என்ற அளவில்தான் இருந்தன. ஆனால் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் போன்ற முக்கிய தலைவர்கள் பேசிய விதம் இதை மேலும் உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
திமுக 25 தொகுதிகளை மட்டுமே வழங்க முன்வந்துள்ளதாகவும், காங்கிரஸ் 35 முதல் 39 தொகுதிகள் வரை கோரி வருவதாகவும் தகவல்கள் உள்ளன. இந்த இழுபறி காரணமாகத்தான் மாற்று வாய்ப்புகளை காங்கிரஸ் ஆராய்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தவெக தரப்பில் இருந்து பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான செல்வாக்கு மற்றும் ராகுல் காந்தி போன்ற தலைவர்களின் ஈர்ப்பு ஆகியவை இளைஞர்கள் மத்தியில் தங்கள் கட்சிக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது.

தவெக 70க்கும் மேற்பட்ட தொகுதிகளை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் திமுகவுடன் கூட்டணி என்று தொடர்ந்து காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டு வரும் சூழ்நிலையில் இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தும் வகையில் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. தமிழக வெற்றி கழகத்துடன் ஹைதராபாத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்க காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவும் அங்கு சென்று உள்ளதால் சந்தேகம் வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: புறவாசல் வழியா கூட்டணி பேசும் கட்சி காங்கிரஸ் இல்ல... வதந்திகளுக்கு செல்லப் பெருந்தகை பதிலடி..!!
அது மட்டுமல்லாது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஆகியோரும் ஹைதராபாத்திற்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது. அதைவிட முக்கியமான ஒன்று instagram மற்றும் X ஆகிய தளங்களில் முதலமைச்சர் ஸ்டாலினை ராகுல் காந்தி அண்ட் ஃபாலோ செய்திருப்பதாகவும் கூறப்படும் சம்பவங்கள் சந்தேகங்களை அதிகாரிக்கச் செய்கிறது.
இதையும் படிங்க: ஆந்திரா வெடிவிபத்து... பாதுகாப்பு குறைபாடுதான்... கொந்தளித்த செல்வப்பெருந்தகை..!