வேலூர் மாவட்டம் திருவலம் கிராமத்தில் கூட்டுறவு துறை சார்பில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி
தலைமையில் திருவலம் பேரூராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை துவங்கி வைத்ததுடன் ரூபாய் ஒரு கோடியே 75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனிடம் பாலாறு மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்த கேள்விக்கு, மாறுபட்ட கருத்து எங்களுக்கு கிடையாது. பாலாற்றை மாசுபடுத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
2000 கோடி நிதி ஒதுக்கியும் எந்த ஒரு தடுப்பனையும் திமுக அரசு கட்டவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதை குறித்து கேட்டதற்கு, கலைஞர் ஆட்சி முதல் தளபதி ஆட்சி வரை பல்வேறு தடுப்பணைகள் கட்டியுள்ளோம் எடப்பாடி பழனிச்சாமி வீம்புக்கு பேசுகின்றார் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்+தேமுதிக - திமுக கூட்டணியில் இணைகிறதா புதிய கட்சிகள்? - நெத்தியடி பதிலடி கொடுத்த துரைமுருகன்...!
பார்ப்பனியம் உள்ளே வரவும் ஜெயலலிதா முதல்வராகவும் எம்ஜிஆர் காரணம் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, அதை படிக்கலை, பார்க்கவில்லை அறைகுறையாக பதில் சொல்லக்கூடாது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது அதிமுக கொண்டு வந்த ஏறி தூர்வாரம் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி இருந்தது குறித்து கேட்டதற்கு, ஊருக்கு ஒரு ஏரியையாவது அவர்கள் தூர்வாரியிருக்காங்களா? பணத்தை ஒதுக்கினார்களே தவிர ஒன்றை கூட தூர்வாரவில்லை. இந்த ஆண்டு நாங்கள் தூர்வாரிய ஏரியின் லிஸ்ட் எங்களிடம் உள்ளது வாங்க காட்டுகிறோம்.
கடந்த ஆட்சியில் ஆற்காட்டில் இருந்து செங்கல்பட்டு வரை 25 ஏரியை விட்டார்கள்
அதில் ஒன்றைக் கூட தூருவாராமல் பணத்தைக் கொண்டு சென்று விட்டார்கள். இதுகுறித்து அப்போதே நான் சட்டசபையில் கேள்வி எழுப்பினேன் வந்து ஏரியை காட்டுங்கள் என எதற்கும் பதில் இல்லை.
பாலாற்றை மாசுபடுத்தும் வகையில் கழிவு நீரை விடுவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது குறித்து கேட்டதற்கு அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க: அதுக்கு கூட வரமாட்டார்... விஜய்யை ஒரே வார்த்தையில் முடித்துவிட்ட துரைமுருகன்...!