• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் கட்டுப்பாட்டில் விசிக?... திமுகவை விமர்சித்த திருமாவுக்கு டபுளாக திருப்பிக் கொடுத்த ரகுபதி...!

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது திருமாளவன் கையில் உள்ளதா அல்லது விஜய் கையில் உள்ளதா என்பதை திருமாவளவன் கூற வேண்டும் 
    Author By Amaravathi Sat, 12 Sep 2026 14:25:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-ex-minister-ragupathi-slams vck

    புதுக்கோட்டை திலகர் திடலில் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எஸ் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்: நடிகர் விஜய் சினிமாவில் ஹீரோ அரசியலில் வில்லன் என்று செயல்பட்டு வருகிறார். சட்டப்பேரவையில் அவதூறாக பேசிய முதலமைச்சரை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சர்க்காரியா கமிஷன் வழக்கில் குற்றச்சாட்டு எடுத்து வைத்துக் கொண்டு அவதூறாக முதலமைச்சர் சட்டசபையில் பேசினார்.  தீர்ப்புகள் குறித்து தான் பேசப்பட வேண்டுமே தவிர குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு எந்த ஒரு கருத்தையும் முன்வைக்க கூடாது.
     
    அதே போன்று அமலாக்கத்துறை வழக்கில் குற்றங்கள் குறித்து கருத்துதான் தெரிவித்து உள்ளதே தவிர நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து தீர்ப்பு வரவில்லை, தீர்ப்பு வந்த பிறகு அது குறித்து விமர்சனம் செய்யலாம். 

    மிசா காலத்தில் எங்கள் தலைவர் எதற்காக சிறை சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும். எதற்காக போனார் என்று அமைச்சர் நிர்மல் குமார் கேட்கிறார் அவருக்கு வரலாறு தெரியாது.  வரலாற்றை மாற்ற கூடிய இயக்கமாக இன்றைக்கு தமிழக வெற்றிக்கழகம் உள்ளது. 

    இதையும் படிங்க: சட்டமன்றத்தில் பேசினால் தப்பா..? ஜனநாயக படுகொலை..! ரகுபதி காட்டம்..!!

    இதே நிலை நீடித்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது காந்தி கிடையாது விஜய்க்கு தாத்தாவுக்கு தாத்தா என்று அவர்கள் ரீல்ஸ் போடுவார்கள் அதையும் மக்கள் நம்பக்கூடிய சூழ்நிலை ஏற்படும் அபாண்டமாக பேசுவதையே தொழிலாக தமிழக வெற்றி கழகம் வைத்துள்ளது. உண்மையை ஒரு தடவையாவது பேசுவார்களா?

    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்  15 குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி கேட்டிருந்தார் அதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் கூறவில்லை. யாராவது லஞ்சம் வாங்கினால் விஜய் மாமாவிடம் கூறி விடுவேன் என்று கூறுங்கள் என்று முதலமைச்சர் கூறினார். லஞ்சம் வாங்குவது குறித்து வெளிய கூறினார் அடுத்த நாள் அவர் உயிரோடு இல்லை இருப்பது கிடையாது இதுதான் இன்றைய நிலை.

    தமிழ்நாட்டில் தற்போது கடும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதைத் தீர்ப்பதற்கு முதலமைச்சரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தமிழ்நாடு முழுவதும் தற்போது ஒரு மணி நேரம் மின்வெட்டு என்று மறைமுகமாக அறிவித்துவிட்டனர். 

    இதை தமிழ்நாடு அரசும் ஒத்துக்கொண்டு விட்டது போல் தான் செயல்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டிவிட்டது. இதே நிலை நீடித்தால் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டு மக்கள் புரட்சி வெடிக்கும் நிலை ஏற்படும். அந்த புரட்சிதான் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது. 

    திமுக அரசு கார் பந்தயம் நடத்தியதை அப்போது தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய் விமர்சனம் செய்தார் ஆனால் தற்போது முதலமைச்சரான பிறகு அவரே 400 கோடி ரூபாய் செலவில் கார் ரேஸ் நடத்துவதற்கு தனி மைதானம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். 

    இந்தியாவிலேயே விளையாட்டுக்குரிய தலைநகரமாக தமிழ்நாட்டை திமுக ஆட்சி கொண்டு வந்துள்ளது. காலை உணவுத் திட்ட விழாவிற்கு ஆசிரியர்களே செலவு செய்ய வேண்டும் என்று  தமிழ்நாடு அரசு கூறிவிட்டதாக தகவல் வந்துள்ளது.  தன் மூலமாக ஆசிரியர்களை கேவலப்படுத்தி கொச்சைப்படுத்தும் விதமாக அரசு நடத்தி வருகிறது. 

    இரண்டு தொகுதி இடைத்தேர்தல் என்பது சாம்பிள் தான்.  தமிழகத்தில் நடைபெற்று வரும் எல்லா கருத்துகளையும் மக்களிடம் எடுத்து கூறுவோம்.  சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் கரூர் சம்பவத்தின் போது முதல் குற்றவாளியாக விஜயை சேர்க்க வேண்டும் என்று நான் முதல்வரிடம் மன்றாடினேன். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அன்றைய முதல்வர் எங்களுடைய தலைவர் மு க ஸ்டாலின் விஜய் மீது வழக்கு பதியாமல் விட்டுவிட்டார். விஜய் உடன் நடிகர் அவரை கைது செய்து சிறை படுத்த வேண்டாம். அதையே ஒரு பிரச்சினையாக கொண்டு செல்வார்கள். மக்கள் நம்மிடம் உள்ளார்கள் என்று விஜய் மீது மனிதாபிமானம் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் விட்டார் மு க ஸ்டாலின். ஆனால் இப்போதைய முதலமைச்சர் மனிதாபிமானம் என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடிய அளவில் தான் இருக்கிறார்.

    கூட்டணிக் கட்சிகளை மதிக்கக்கூடிய தலைவர் தான் எங்களுடைய தலைவர்.  எங்களுடன் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி வேறு தற்போது விஜய் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி வேறு. கூட்டணியில் இருந்து வெளியேறியவுடன் எங்களை பாராட்ட மாட்டார்கள் அவதூறு தான் பேசுவார்கள் தற்போது அதுதான் திருமாவளவன் செய்துள்ளார் 

    விடுதலை சிறுத்தைகள் தற்போது திருமாவளவனோடு உள்ளதா அல்லது விஜய்யுடன் உள்ளதா என்பதை அவர் கூற வேண்டும். வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் அரசியல் ஜோக்கர்ஸ். சந்தர்ப்பவாத அரசியல்வாதி தான் இருவரும். திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என்று விஜய் விமர்சனம் செய்தார் ஆனால் தற்பொழுது பெரிய கல்லாப்பெட்டியை அவர் தான் வைத்துள்ளார் சமூக நீதி கல்லாப்பெட்டியாக என்று தெரிவித்தார். 

    இதையும் படிங்க: தவெகவால் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... குண்டைத் தூக்கிப் போட்ட செந்தில் பாலாஜி...!

    மேலும் படிங்க
    தவெகவால் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... குண்டைத் தூக்கிப் போட்ட செந்தில் பாலாஜி...!

    தவெகவால் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... குண்டைத் தூக்கிப் போட்ட செந்தில் பாலாஜி...!

    அரசியல்
    நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?

    நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    பயணிகளின் உதவிக்கு வந்த ரோபோ.. கொச்சி விமான நிலையத்தில் புதிய முயற்சி..!!

    பயணிகளின் உதவிக்கு வந்த ரோபோ.. கொச்சி விமான நிலையத்தில் புதிய முயற்சி..!!

    இந்தியா
    “இத்தோட நிறுத்திக்கலைன்னா... திமுககாரங்க என்ன செய்வாங்க தெரியுமா?”... சி.எம்.விஜய்க்கு கீதா ஜீவான் வார்னிங்...!

    “இத்தோட நிறுத்திக்கலைன்னா... திமுககாரங்க என்ன செய்வாங்க தெரியுமா?”... சி.எம்.விஜய்க்கு கீதா ஜீவான் வார்னிங்...!

    அரசியல்
    ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ரத்து..!! நடிகர் விமலுக்கு சென்னை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

    ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ரத்து..!! நடிகர் விமலுக்கு சென்னை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மதுராந்தகத்தில் வெளியூர் வேட்பாளர்! திமுகவில் வெடித்த அதிருப்தி… தேர்தல் பணியை புறக்கணிக்க நிர்வாகிகள் திட்டம்?

    மதுராந்தகத்தில் வெளியூர் வேட்பாளர்! திமுகவில் வெடித்த அதிருப்தி… தேர்தல் பணியை புறக்கணிக்க நிர்வாகிகள் திட்டம்?

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெகவால் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... குண்டைத் தூக்கிப் போட்ட செந்தில் பாலாஜி...!

    தவெகவால் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... குண்டைத் தூக்கிப் போட்ட செந்தில் பாலாஜி...!

    அரசியல்
    நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?

    நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    பயணிகளின் உதவிக்கு வந்த ரோபோ.. கொச்சி விமான நிலையத்தில் புதிய முயற்சி..!!

    பயணிகளின் உதவிக்கு வந்த ரோபோ.. கொச்சி விமான நிலையத்தில் புதிய முயற்சி..!!

    இந்தியா
    “இத்தோட நிறுத்திக்கலைன்னா... திமுககாரங்க என்ன செய்வாங்க தெரியுமா?”... சி.எம்.விஜய்க்கு கீதா ஜீவான் வார்னிங்...!

    “இத்தோட நிறுத்திக்கலைன்னா... திமுககாரங்க என்ன செய்வாங்க தெரியுமா?”... சி.எம்.விஜய்க்கு கீதா ஜீவான் வார்னிங்...!

    அரசியல்
    மதுராந்தகத்தில் வெளியூர் வேட்பாளர்! திமுகவில் வெடித்த அதிருப்தி… தேர்தல் பணியை புறக்கணிக்க நிர்வாகிகள் திட்டம்?

    மதுராந்தகத்தில் வெளியூர் வேட்பாளர்! திமுகவில் வெடித்த அதிருப்தி… தேர்தல் பணியை புறக்கணிக்க நிர்வாகிகள் திட்டம்?

    தமிழ்நாடு
    தமிழறிஞருக்கு விடை கொடுத்த தமிழகம்... சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை... ஆசைப்படியே தகனம்..!!

    தமிழறிஞருக்கு விடை கொடுத்த தமிழகம்... சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை... ஆசைப்படியே தகனம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share