நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்கள் யாரை எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் முக்கியம் மக்கள் திராவிட முன்னேற்ற கழகம் நமது முதலமைச்சரின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது தான் முக்கியம் .
கிராமப்புறங்களில் உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வமாக இருக்கிறார்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, வரக்கூடிய தேர்தலில் அறிகுறியாக பார்க்கிறேன். ஆர்வமாக மக்கள் இதில் பங்கேற்கிறார்கள். முதலமைச்சரின் மீது மிகவும் நம்பிக்கையோடு இந்த ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தில் பங்கேற்கிறார்கள்.

அதிமுகவும்,தமிழக வெற்றி கழகமும் தனித்துப் போட்டியிடுவது திமுகவிற்கு சவாலாக இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்கள் இருவருக்கும் வேண்டுமானால் ஏதாவது சவாலாக இருக்கலாம். அதிகமானோர் தனித்துப் போட்டியிடலாம். அதற்கு ஒரு வாழ்த்துக்கள். அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. வெற்றி என்பது எப்போதும் திமுக கூட்டணிக்கு என்பதுதான். மக்களின் வரவேற்பை பார்க்கும்போது தெரிகிறது. கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பது முதலமைச்சர் எடுக்க வேண்டிய முடிவு. நம்முடைய முதல்வரை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் நம்முடன் பணியாற்றலாம்.

இதையும் படிங்க: தவெக-வின் நெக்ஸ்ட் மூவ் என்ன? செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!!
அதிமுகவை கபளிகரம் யாராலும் செய்ய முடியாது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, அவர்களின் பக்கத்தில் இருப்பவர்களுக்கு அவர் ஒரு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று அவருக்கே கூறியிருக்கிறார்.

விஜய் பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார் இந்த கேள்விக்கு, சில பேர் இதனால் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கலாம். மக்களுடைய எதிரி யார் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். விஜய் திமுகவையும் பாஜகவையும் ஒரே நேர்கோட்டில் வைத்து பார்க்கிறார் என்ற கேள்விக்கு, மக்கள் யாரை எப்படி பார்க்கிறார் என்பது தான் முக்கியம். மக்கள் திமுக நம்முடைய முதல்வர் மீது மிகப்பெரிய நம்பிக்கையோடு இருக்கிறார்கள். தமிழக மக்கள் யாருக்கு தேர்தலில் வாக்களிப்பார்கள் என்பதுதான் முக்கியம் என்றார்.
இதையும் படிங்க: தவெக கொள்கை தலைவராக அம்பேத்கர் இருந்திருக்க மாட்டார்.. ஓபனாக அடித்த திருமாவளவன்!!