தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், 3வது ஆண்டாக இன்று 12+ மற்றும் 10ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை அழைத்து கல்வி விருதுகளை வழங்கி கெளரவித்தார். இந்த விழாவில் முதற்கட்டமாக 88 தொகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய விஜய்,படிப்பில் சாதிக்கணும் என்பது முக்கியம்தான். அதுக்குன்னு ஒரே ஒரு படிப்புல மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிச்சு அதுல மட்டும் சாதிக்கணும்னு அழுத்தம் ஏத்திக்க தேவை இல்லை. நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப பெருசு. அதுல நீங்க சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கு எனக்கூறினார்.

விஜயின் இந்த பேச்சு ஆர்.எஸ்.எஸ். அஜெண்ட்டாவை ஒத்திருப்பதாக திமுக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரபல சேனல் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தின் போது தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் டால்ஃபின் ஸ்ரீதரன் பேசிய வீடியோவை திமுக ஐ.டி.விங்க் சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு, வைரலாக்கி வருகிறது.

அந்த வீடியோவில் டால்ஃபின் ஸ்ரீதரன், மருத்துவம் மட்டும் தான் படிப்பா?. நீட் வருவதற்கு முன்பு ஏழை மாணவர்கள் மருத்துவம் படித்தார்களா?. இதற்கு திமுக சார்பில் பேசியவர் தாழ்த்தப்பட்ட, பின் தங்கிய இந்துக்கள் மருத்துவம் படிக்கக்கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸின். அஜெண்ட்டா, அதை இப்போது அது உண்மை என்பது நிரூபணமாகியுள்ளது என பேசியுள்ளார்.
இதையும் படிங்க: நீட் மட்டும் தான் உலகமா? சிந்தித்து செயல்படுங்கள்.. மாணவர்களுக்கு விஜய் அறிவுரை..!
நீட்தான் உலகமா என்று கேட்கும் சங்கி தற்குறிகளுக்கு..
அனைவருக்குமான மருத்துவக் கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்குதான் நீட் தேர்வை ஒழிக்க தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருகிறது. அப்போராட்டத்தை நீர்த்துபோக செய்யும் வகையிலும், ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கனவு அறவே… pic.twitter.com/fznFy35JbL
— DMK IT WING (@DMKITwing) May 30, 2025
தற்போது இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள திமுக ஐ.டி.விங்க், நீட்தான் உலகமா என்று கேட்கும் சங்கி தற்குறிகளுக்கு..அனைவருக்குமான மருத்துவக் கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்குதான் நீட் தேர்வை ஒழிக்க தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருகிறது. அப்போராட்டத்தை நீர்த்துபோக செய்யும் வகையிலும், ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கனவு அறவே இருக்கக்கூடாது என்று வெளிப்படையாக பேசும் தற்குறிகளுக்கு எதன்மீதும் அக்கறையும், புரிதலும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. கல்வியும், எதிர்காலம் குறித்த கனவும் அவரவர் விருப்பம். உங்கள் ஆர்.எஸ்.எஸ் அஜென்ட்டா மூக்கை அதனுள் நுழைக்காதீர்கள்” என பதிவிட்டுள்ளது. இது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கான மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டம்மி அப்பாவும், மகனும் சொல்லுவது எல்லாமே பொய்.! விளைவை பார்த்தீர்களா! இபிஎஸ் ஆவேசம்..!