திருச்சியை இரண்டாவது தலைநகரமாக கொண்டு வந்தால் சாமானியனும் பயன்பெறுவார்கள். இது குறித்து ஏற்கனவே தமிழக முதல்வரிடம் கூறியுள்ளேன். இது குறித்து பரிசீலனை செய்வார் என நம்புகிறேன் - மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தகவல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில் மதிமுக மீது விமர்சனம் குறித்த கேள்விக்கு, திமுகவின் மகளிர் அமைப்பினரும், இணையதள அணியினரும் பிற தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் மீது கொச்சையான, தனிநபர் தாக்குதல்களையும்அவதூறுகளையும் முன்வைத்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டாக இத்தகைய நாகரிகமற்ற விமர்சனங்கள் தொடர்கின்றன. கட்சித் தலைவர் கண்ணியமாகப் பேச வேண்டும் என்று கூறினாலும், அதைத் தங்கள் தொண்டர்களுக்கு முதலில் வலியுறுத்த வேண்டும் என்றார்.
தலைமைச் செயலகம் குறித்த கேள்விக்கு, பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் அமைப்பதில் போக்குவரத்து நெரிசல், மீனவர் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற பல சிக்கல்கள் உள்ளன. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் மக்களின் எதிர்ப்பை உணர்ந்து மாற்று நடவடிக்கை எடுத்தது போல, முதலமைச்சர் ஜோசப் விஜய் இதிலும் நல்ல முடிவெடுப்பார் என நம்புகிறோம். திருச்சிதான் தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக அறிவிக்கப்பட வேண்டும். இது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டமாகும் எனக்கு கூறினார்
இதையும் படிங்க: ஜாலியாக சுற்றித் திரியும் கனிமவளக் கொள்ளை " காட்பாதர்கள்"..! அன்புமணி ராமதாஸ் விமர்சனம்..!!
யுபிஐ கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு, ஒன்றிய அரசு யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரி விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் ஏமாற்றமளிக்கிறதுரூ.2,000-க்கு மேலான பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.1 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் செய்யும் சிறுகடைக்காரர்களை இது கடுமையாகப் பாதிக்கும். இதனால் சாமானிய மக்கள் மீதான விலைவாசி உயரும் என்பதால், இக்கட்டண உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இடைத்தேர்தல் வெற்றி குறித்து கேள்விக்கு, இடைத்தேர்தல் பொருத்தவரை மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் நமது தமிழக முதல்வர் லஞ்சமற்ற, வெளிப்படையான நிர்வாகத்தைத் தருவதாகக் கூறினார் அதை செய்து காட்டியுள்ளார்.
தேசிய அளவில் மூன்றாவது கூட்டணி குறித்து கேள்விக்கு, காங்கிரஸை பலவீனப்படுத்தி பாஜாகவிற்கு மறைமுகமாக உதவும் நோக்கில், காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை உருவாக்க திமுக முயற்சிப்பது பாஜாகவின் ஆதரவுச் செயல்பாடே
ஆகும் என கூறினார்
இதையும் படிங்க: சி.எம்.விஜய் லண்டன் பயணம் வெற்றி... எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்ய ஒப்பந்தம்? - தமிழ்நாடு அரசு விளக்கம்...!